புக்கிட் மேரா வீடமைப்புப் பேட்டை யின் புளோக்குக்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்துக்குள் தனது காரை விட்ட 27 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் உட்கொண் டிருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆடவர், போலிஸ் அதிகாரி தமது கட மையை ஆற்றுவதைத் தடுக்கும் விதத்தில் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார் என்ற குற்றத்தையும் எதிர்நோக்குகிறார் என்று போலிஸ் நேற்று தெரிவித்தது.
செல்லுபடியாகாத வாகன மோட்டும் உரிமத்துடன் அவர் காரோட்டி இருக்கிறார் என்றும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்தது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜாலான் புக்கிட் மேரா, புளோக் 134க்கு அருகில் உள்ள விளை யாட்டு மைதானத்துக்குள் ஒரு கார் நுழைந்தது தொடர்பான தகவல் தங்களுக்கு அன்று இரவு 11.58 மணிக்குக் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது.
சிறு காயங்களுக்கு ஆளான கார் ஓட்டுநரைத் தவிர மற்ற யாருக்கும் காயமில்லை என்று அறியப்படுகிறது. அன்று நள்ளிரவு வாக்கில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஆம்புலன்ஸ் ஒன்றும் அங்கு அனுப்பப்பட்டது.
“20 வயதுகளில் உள்ள ஆடவர் ஒருவருக்கு சிறு காயங்களுக்காக முதலுதவி வழங்கப்பட்டது. ஆனால், அவர் மருத்துவமனைக் குச் செல்ல மறுத்துவிட்டார்,” என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் கூறினார். விபத்து தொடர்பான விசா ரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துரைத்த பிரதமர் அலுவலக அமைச்சரும் தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினருமான இந்திராணி ராஜா, “என் தொகுதியில் நடந்த இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவத்தில் நல்லவேளையாக
ஓட்டுநருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. மற்ற எவருக்கும் காயம் ஏற்படவில்லை. “சம்பவம் நடந்த இந்த விளை யாட்டு மைதானத்தைச் சுற்றி நகர மன்றம் தடுப்பு வேலிகளைப் போட்டுள்ளது. அங்கு பாதுகாப்புச் சோதனையும் பழுதுபார்ப்புப் பணி கள் பற்றிய மதிப்பீடும் இடம்பெறும். அதுவரை இந்த விளையாட்டு மைதானத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம்,” என்றும் தமது குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டார்.