புத்தாண்டில் உதித்து, புது நம்பிக்கையை விதைத்துள்ள வித்யுத்

புத்தாண்டில் உதித்து, புது நம்பிக்கையை விதைத்துள்ள வித்யுத்

1 mins read
3b3a4e0d-78f1-4a8c-b12f-72fdae2c85db
இந்தப் புத்தாண்டில் உலகை எட்டிப் பார்த்த இரண்டாவது சிங்கப்பூரர் எனும் பெருமையைப் பெற்றார் வித்யுத். படம்: சாவ்பாவ் -

இந்தப் புத்தாண்டில் உலகை எட்டிப் பார்த்த இரண்டாவது சிங்கப்பூரர் எனும் பெருமையைப் பெற்றார் வித்யுத். புத்தாண்டு பிறந்து ஒரு வினாடி கழித்து, அதாவது நள்ளிரவு 00:00:01 மணிக்கு தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் பிறந்த இவர், வடிவமைப்புப் பொறியாளர் பாபு ஜெகநாதன், 29 - இல்லத்தரசி விஷ்ணுபிரியா, 25, தம்பதியரின் 2வது பிள்ளை. இத்தம்பதிக்கு ஏற்கெனவே விதுன் என்ற இரண்டரை வயது மகன் இருக்கிறார். மவுன்ட் அல்வேர்னியா மருத்துவமனையில் பெஞ்சமின் லிம் - அமண்டா லெக் ஆசிரியத் தம்பதிக்கு சரியாக நள்ளிரவு 12 மணிக்குப் பிறந்த கிறிஸ்டி லிம்மே இப்புத்தாண்டில் பிறந்த முதல் குழந்தை. படம்: சாவ் பாவ்