வூஹான் கிருமித் தொற்று: தயார்நிலையில் மருத்துவமனைகள்

வூஹான் கிருமி தொற்றிய மூன்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட இருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்று நோய்களுக்கான தேசிய மையம் இங்கு இருந்தாலும் நாட்டின் அனைத்து பொது மருத்துவமனைகளும் இதுபோன்ற சம்பவங்களைச் சமாளிக்கும் திறன் பெற்றுள்ளதால் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அந்த தந்தை, மகன் இருவரும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கிருமி தொற்றியுள்ள மூன்றாம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 53 வயது மாது, தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் வூஹான் கிருமி தொற்று இருப்பதாகச் சந்தேகப் படுவோர் எந்த பொது மருத்துவ மனைக்குச் சென்றாலும் அங்கு அவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மூவரும் கிருமி தொற்றின் மையப்பகுதியான வூஹான் நகரைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டது.

முதல் கிருமித் தொற்று சம்பவத்தில் விடுமுறைக்காக இங்கு வந்த அந்த ஆடவர், உடல்நலமில்லாமல் போனார். அதைத் தொடர்ந்து அந்த ஆடவரும் அவரது மகனும் மருத்துவமனைக்குச் செல்ல முடிவு எடுத்தனர்.

ஆடவரும் அவரின் மகனும் தங்கியிருந்த ‘ராசா செந்தோசா ரிசோர்ட்’டுக்கு மிக அருகில் இருப்பது சிங்கப்பூர் பொது மருத்துவமனை என்பதால் இருவரும் டாக்சி யில் அங்குச் சென்றனர்.

இதற்கிடையே அந்த டாக்சி ஓட்டுநரைத் தொடர்புகொள்ள சுகாதார அமைச்சு முயன்று வருகிறது.

இதற்குமுன் 2003ஆம் ஆண்டில் சார்ஸ் நோயால் சிங்கப்பூர் பெரும் பாதிப்புக்குள்ளானபோது டான் டோக் செங் மருத்துவமனை, நாட்டின் சிகிச்சை மையமாகத் தெரிவு செய்யப்பட்டது.

சார்ஸ் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் அந்த மருத்துவமனைக்குச் சிகிச்சை பெற உடனே அனுப்பப்பட்டனர். அதோடு சார்ஸ் நோய் தவிர வேறு சிகிச்சைக்காக சென்ற நோயாளிகள், டான் டோக் செங் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.

விமான நிலையம், தனியார் மருந்தகங்கள், பலதுறை மருந்தகங்கள் ஆகிய இடங்களில் கிருமி தொற்று இருப்பதாக சந்தேகிக்கப் படுவோர் மட்டுமே தற்போது டான் டோக் செங் மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு அனுப்பப்படுகின்றனர். அங்கு அவர்களின் உடல்நிலை மதிப்பீடு செய்யப்படுகிறது.

இந்நிலையில் அம்மருத்துவ மனைக்கு வரும் நபருக்கு வூஹான் கிருமி இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், அந்நபர் தொற்று நோய் களுக்கான தேசிய மையத்தில் அனுமதிக்கப்படுவார். அங்கு அமைக்கப்பட்டுள்ள அதற்குரிய அறையில் அந்த நோயாளி தனிமைப்படுத்தப்படுவார்.

எதிர்மறை அழுத்தம் கொண்ட இச்சிறப்பு வகை அறைகள் டான் டோக் செங் மருத்துவமனையில் மொத்தம் 124 உள்ளன.

இந்த அறைகளைப் பொறுத்தவரை காற்று உள்ளே செல்ல முடியுமே தவிர, உள்ளிருக்கும் காற்று வெளியேற முடியாது.

கிருமித் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்க, இதுபோன்ற தனிமைப்படுத்தும் அறைகள் அனைத்து முக்கிய பொது மருத்துவமனை களிலும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மருத்துவமனைகளைத் தவிர்த்து வேறு மருத்துவமனை களுக்குச் செல்லும் நோயாளி களிடமிருந்து சோதனை மாதிரிகள் எடுக்கப்படும்.

நோயாளிக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டால், அதையடுத்து தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் அமைந்துள்ள ஆய்வுக்கூடத்திற்கு நபரின் சோதனை மாதிரிகள் அனுப்பப்படும்.

அபாயகரமான நோய்க்கிருமிகளைக் கையாளக்கூடிய பயிற்சி பெற்ற நிபுணர்களும் வசதிகளும் அவ்விடத்தில் உள்ளதாக அறியப் படுகிறது. புதிதாக உருவாகியுள்ள வூஹான் கிருமி உட்பட ஏழ்வகை கொரோனா கிருமிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!