என்டியுசி: தேவைக்கதிகமான பொருட்கள் இருப்பில் உள்ளன; பதற்றம் வேண்டாம்

தேவையான பொருட்களை மட்டும் வாங்குங்கள். தேவைக்கதிமாக பொருட்கள் உள்ளன என்ற என்டியுசி ஃபேர்பிரைசின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சியா கியன் பெங் நேற்று தெரிவித்துள்ளார்.

ஃபேர்பிரைசிடம் தற்போது ஒன்பது மில்லியன் உருளைகள் கழிவறைப் பயன்பாட்டு தாள்கள், 1.2 மில்லியன் திடீர் நூடல்ஸ் பாக்கெட்டுகள், நான்கு மில்லியன் கிலோ அரிசி ஆகியவை இருப்பில் உள்ளன. அன்றாடம் கப்பலில் மேலும் பொருட்கள் வந்துகொண்டிருக்கின்றன என்று அவர் கூறினார்.

என்டியுசி ஃபேர்பிரைசின் பெனோய் விநியோக மையத்துக்கு வருகையளித்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

சிங்கப்பூரில் கொரோனா நோய் பரவல் விழிப்புநிலைக் குறியீடு (டோர்ஸ்கான்) ஆரஞ்சு நிறத்திற்கு உயர்த்தப்பட்ட நேற்றுமுன்தினம் மக்கள் பேரங்காடிகளில் வரிசை பிடித்து பொருட்களை வாங்கினர்.

மக்கள் வாங்கும் பொருட்களில் டிஷ்யூ தாள், அரிசி, திடீர் நூடல்ஸ் போன்றவையும் அடங்கும். வெள்ளிக்கிழமை சில மணி நேரத்துக்குள் இந்தப் பொருட்கள் சில பேரங்காடிகளில் தீர்ந்து போயின.

அரிசிக்கான தேவை 5 மடங்கும், திடீர் நூடல்சுக்கான தேவை 4 மடங்கும் கழிவறைப் பயன்பாட்டு தாளுக்கான தேவை 2.5 மடங்கும் அதிகரித்தது என்று திரு சியா கூறினார்.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஏற்கெனவே பொருட்கள் கொள்முதலை மூன்று மடங்காக ஃபேர்பிரைஸ் அதிகரித்துள்ளது. சேமிப்பு மையங்களிலிருந்து கடை களுக்கான விநியோகமும் இருமடங்கு கூடியுள்ளது.

நேற்று முன்தினம் ஏற்பட்ட பரபரப்பு அவர் எதிர்பார்க்காதது என்றும் எனினும் தேவைக்கதிகமான பொருட்கள் இருப்பில் உள்ளதாகச் சொன்ன அவர், தற்போது விலையைக் கூட்ட வேண்டிய அவசியமில்லை என்றார்.

விழிப்புநிலைக் குறியீடு மக்கள் ஆரஞ்சு நிறத்திற்கு உயர்த்தப்பட்டதால் அச்சமடைந்து வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களை வாங்கிக் குவிக்கத் தேவையில்லை என்று பேரங்காடிகள் தெரிவித்துள்ளன. பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது என்று அவை உறுதிப்படுத்தின. நேற்றும் பேரங்காடிகளில் கூட்டம் அதிகமாக இருந்தபோதும் நேற்றுமுன் தினம் போல் அத்தனை கூட்டமில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ செய்தி கூறியது. கூட்டமான இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டபோதும், என்டியுசி ஃபேர்பிரைஸ், கோல்ட் ஸ்டோரேஜ், ஷெங் சியோங், பிரைம் சூப்பர் மார்கெட்ஸ் போன்றவற்றில் ஏராள மக்கள் நேற்று வரிசை பிடித்து நின்று பொருட்களை வாங்கினர். தீர்ந்துபோன பொருட்களை மீண்டும் கொண்டு வந்து நிரப்புவதில் கடை ஊழியர்கள் பரபரப்பாக இருந்தனர்.

கிருமித் தொற்று பரவலில் இருந்து பாதுகாக்க மக்கள் டிஷ்யூ தாள்களை அதிகம் பயன்படுத்துவதால் அவற்றை அதிகம் வாங்குகின்றனர். அவை தீர்ந்துவிடக்கூடும் என்ற அச்சத்தில் வாங்கி வைத்துக்கொள்கின்றனர் என்று பெயர் குறிப்பிட விரும்பாத வாடிக்கையாளர் ஒருவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!