நேர்மறை வளர்ச்சி விகிதம்: அரசாங்கம் எதிர்பார்ப்பு

கொவிட்-19 கிருமித்தொற்றுத் தாக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக சிங்கப்பூர் பொருளியலுக்குப் பெரும் உத்வேகம் அளிக்கும் வகையில் வரவு செலவுத் திட்ட அறிக்கை அமைந்துள்ளது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டில் பொருளியல் வளர்ச்சி -0.5% முதல் 1.5% வரை இருக்கலாம் என கணிக்கப்படுவதாக இவ்வாரத் தொடக்கத்தில் அரசாங்கம் முன்னுரைத்து இருந்தது. இந்நிலையில், பொருளியல் வளர்ச்சி விகிதம் நேர்மறையாகவே இருக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாக திரு ஹெங் கூறினார்.

பொருளியல் வளர்ச்சியைப் பொறுத்தவரை, ஏற்றமோ இறக்கமோ எது வந்தாலும் அதனை எதிர்கொள்ள அமைப்புகள் தயாராகவுள்ளன என்று திரு ஹெங் குறிப்பிட்டார். ஆகையால், பொருளியல் மந்தநிலை சாத்தியத்தை எதிர்கொள்ளவும் ஆயத்தமாக வேண்டும் என நிதியமைச்சருமான திரு ஹெங் வலியுறுத்தியுள்ளார்.

‘புளூம்பெர்க்’ தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு சொன்னார்.

“இவ்வாண்டில் பொருளியல் வளர்ச்சி நேர்மறை விகிதத்திலேயே இருக்கும் என்பதே எங்களின் பொதுவான நிலைப்பாடு. வரும் மாதங்களில் உலகப் பொருளியல் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்தே அது அமையும். அதே வேளையில், கொரோனா கிருமித்தொற்று பரவல், அதன் தீவிரத்தன்மை ஆகியவற்றைப் பொறுத்தே உலகப் பொருளியல் இருக்கும்,” என்றார் திரு ஹெங்.

சிங்கப்பூரில் இதுவரை 80க்கும் மேற்பட்டோரை கொரோனா கிருமி தொற்றியுள்ளது.

இது, சுற்றுலா, வர்த்தகம் போன்ற துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுவதால் சிங்கப்பூரும் தனது பொருளியல் வளர்ச்சி விகிதம் குறையலாம் எனக் கணித்துள்ளது.

இதையடுத்து, நிறுவனங்கள், குடும்பங்கள், அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கி, பொருளியலை நிலைப்படுத்த உதவும் வகையில் $6.4 பில்லியன் ஒதுக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் வரவு செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தபோது அமைச்சர் ஹெங் அறிவித்தார்.

பொருளியலை வலுப்படுத்த நாணயக் கொள்கைகளும் நிதிக் கொள்கைகளும் இணைந்து செயலாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கிருமித்தொற்றை எதிர்த்து போராடி வரும் முதல்நிலை அமைப்புகளுக்காக வரவு செலவுத் திட்டத்தில் $800 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, வர்த்தகங்களுக்கும் குடும்பங்களுக்கும் ஆதரவளித்து, பொருளியலை நிலைப்படுத்த $5.6 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!