பிரதமர் லீ: நிலைமை கட்டுக்குள் இருக்கிறது

பிரதமர் லீ: நிலைமை கட்டுக்குள் இருக்கிறது

2 mins read
daff0dc3-6d62-461a-980c-f9bd31fbf63b
-

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித் ெதாற்று கட்டுக்குள் இருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். 'டோர்ஸ்கான்' குறியீட்டை சிவப்பு நிறத்திற்கு உயர்த்தப் போவதில்லை என்ற திரு லீ, அதே நேரத்தில் கடுமையான நடவடிக் ைககளுக்குத் திட்டமிட்டு வருவதாகவும் அவற்றை நடைமுறைப்படுத்தவேண்டிய தேவை ஏற்படின் அதற்காக சிங்கப்பூரர்களை ஆயத்தப்படுத்தி வருவதாகவு ம் கூறினார். காேரானா கிருமித்தொற்று தொடர்பாக பிரதமர் இன்றிரவு தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

சிங்கப்பூரில் நாளுக்கு நாள் புதிதாக சிலருக்குக் கிருமித் ெதாற்று ஏற்பட்டாலும் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளால் அது பெரியளவில் பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது என்று பிரதமர் லீ குறிப்பிட்டார். அதே நேரத்தில், கிருமிைய நம்மால் முழுமையாக அழிக்க முடியவில்லை என்றும் அவர் சொன்னார். அதே நேரத்தில், ஐரோப்பா, மத்தியக் கிழக்கு நாடுகள் என உலகின் மற்ற பகுதிகளில் கிருமி வேகமாகப் பரவி வருவதைச் சுட்டிய அவர், ஒவ்வொரு 57 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரட்டிப்படைகிறது என்றும் அதனால்தான் உலக சுகாதார நிறுவனம் கொரோனா கிருமித்தொற்றை 'பேரளவு நோய்ப் பரவலாக' அறிவித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

பல நாடுகளும் கொரோனா பிரச்சினையைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளாதேத அது வேகமாகப் பரவ முக்கிய காரணம் என உலக சுகாதார நிறுவனம் சுட்டியுள்ளது. ஆனால், சிங்கப்பூர் அதைப் பெரும் பிரச்சி-னையாகக் கருதி முன்னெச்சரிக்கை, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்ற திரு லீ, அதனால்தான் இந்தப் பிரச்சினையில் மற்ற நாடகள் சிங்கப்பூரை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பாராட்டியதையும் சுட்டிக்காட்டினார்.