பள்ளிவாசல்கள் மார்ச் 26ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்

பள்ளிவாசல்கள் மார்ச் 26ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்

2 mins read
0fb5e73f-83e4-4885-9ce3-acc1fe6cf82c
கொரோனா கிருமி பர­வா­மல் தடுக்­கும்­வி­த­மாக சிங்­கப்­பூ­ரில் உள்ள 70 பள்­ளி­வா­சல்­களும் குறைந்­தது அடுத்த ஒன்­பது நாட்­க­ளுக்கு, அதா­வது இம்­மா­தம் 26ஆம் தேதி வரை மூடப்­பட்­டி­ருக்­கும் என இஸ்­லா­மிய சமய மன்­றம் (முயிஸ்) அறி­வித்­துள்­ளது. படம்: எஸ்டி/ திமத்தி டேவிட் -

கொரோனா கிருமி பர­வா­மல் தடுக்­கும்­வி­த­மாக சிங்­கப்­பூ­ரில் உள்ள 70 பள்­ளி­வா­சல்­களும் குறைந்­தது அடுத்த ஒன்­பது நாட்­க­ளுக்கு, அதா­வது இம்­மா­தம் 26ஆம் தேதி வரை மூடப்­பட்­டி­ருக்­கும் என இஸ்­லா­மிய சமய மன்­றம் (முயிஸ்) அறி­வித்­துள்­ளது.

இதன் கார­ண­மாக, அடுத்த வியா­ழக்­கி­ழமை வரை, அனைத்து கூட்­டுத் தொழு­கை­களும் பள்­ளி­வா­சல்­களில் இடம்­பெ­றாது.

பள்­ளி­வா­சல்­கள் மீண்­டும் திறக்­கப்­பட்­ட­தும் அனைத்­துப் பள்­ளி­வாசல்­க­ளி­லும் கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் மேம்­படுத்­தப்­பட்ட நட­வ­டிக்­கை­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று முயிஸ் தெரி­வித்­துள்­ளது.

பள்­ளி­வா­சல்­க­ளுக்கு வரும் அனை­வ­ரின் உடல் வெப்­ப­நிலையை அவர்­க­ளைத் தொடா­மல் பரி­சோ­தித்­தல், உடல்­ந­லம் குன்­றி­யி­ருப்­போ­ரைத் திருப்பி அனுப்­பு­தல், தொழு­கைக்கு வரு­வோர் தங்­க­ளது சொந்த தொழு­கைப் பாயைக் கொண்டு வரப் பணித்­தல் உள்­ளிட்­டவை அதில் அடங்­கும்.

கிரு­மித்­தொற்­றால் மேலும் அதி­க­மான சிங்­கப்­பூ­ரர்­கள் பாதிக்­கப்­பட்டு இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதை அடுத்து பள்­ளி­வா­சல்­களை மூடும் காலத்தை மேலும் நீட்­டிக்க முடிவு செய்­த­தாக முயிஸ் விளக்­க­ம­ளித்­தது.

கடந்த மாதம் 27ஆம் தேதி­யில் இருந்து இம்­மா­தம் 1ஆம் தேதி வரை சிலாங்­கூ­ரில் நடந்த சம­யக் கூட்­டத்­தில் பல்­வேறு நாடு­க­ளைச் சேர்ந்த 10,000 பேர் கலந்­து­கொண்­ட­னர். அவர்­க­ளுள் கிட்­டத்­தட்ட 90 சிங்­கப்­பூ­ரர்­களும் அடங்­கு­வர். அந்த 90 பேரில் குறைந்­தது ஐவ­ரைக் கிருமி தொற்­றி­யி­ருப்­பது உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது. கிரு­மித்­தொற்­று­டன் அவர்­கள் இங்­குள்ள பத்­துப் பள்­ளி­வா­சல்­க­ளுக்­குச் சென்­ற­தும் தெரி­ய­வந்­துள்­ளது.

இம்­மா­தம் 3ஆம் தேதி­யில் இருந்து 11ஆம் தேதிக்­குள் அவர்­கள் அந்­தப் பள்­ளி­வா­சல்­க­ளுக்­குச் சென்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது. கிருமி தொற்­றி­யோ­ரில் பள்­ளி­வாசல் ஊழி­யரும் ஒருவர்.

அந்­தப் பள்­ளி­வா­சல்­களில் உறுப்­பிய முறை பின்­பற்­றப்­ப­டு­வ­தில்லை. அத்­து­டன், போதிய பதி­வே­டு­களும் இல்லை என்­ப­தால் அந்­தப் பள்­ளி­வா­சல்­க­ளுக்­குச் சென்ற அனை­வ­ரை­யும் அடை­யாளம் காண்­பது முடி­யாத காரி­யம் எனச் சொல்­லப்­பட்­டது.

அத­னால், கிருமி பர­வு­வ­தைத் தடுக்க பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­க­ளைக் கண்­ட­றி­வது மட்­டும் போது­மா­ன­தாக இருக்­காது என்று முயிஸ் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­னார்.

ஆத­லால், மலே­சி­யா­வில் நடந்­த­து­போல இங்­கும் ஒரே இடத்­தில் அதி­க­மா­ன­வர்­கள் கூடும்­போது கிருமி பர­வும் அபா­யம் உள்­ளது என்று முயிஸ் கரு­து­கிறது.

"அத­னால், சுகா­தார அமைச்­சின் பரிந்­து­ரை­களை ஏற்று, அடுத்த ஒன்­பது நாட்­க­ளுக்கு, அதா­வது 26ஆம் தேதி வரை பள்ளி­வா­சல்­களை மூட முடி­வு செய்யப்­பட்­டுள்­ளது," என்று முயிஸ் தெரி­வித்­தது.

கிருமி பர­வா­மல் தடுக்­கும் நோக்­கில், அனைத்­துப் பள்­ளி­வா­சல்­க­ளை­யும் சுத்­தம் செய்­வ­தற்­காக அடுத்த ஐந்து நாட்­க­ளுக்கு அந்த சம­யத் தலங்­கள் அனைத்­தும் மூடப்­படும் என கடந்த வெள்­ளிக்­கி­ழமை முயிஸ் அறி­வித்­தது. பள்­ளி­வா­சல்­கள் மூடப்­பட்­டி­ருப்­பது சிங்­கப்­பூர் வர­லாற்­றில் இதுவே முதன்­முறை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இப்­போது, மேலும் ஒன்­பது நாட்­க­ளுக்கு அது நீட்­டிக்­கப்­பட்டு இருப்­ப­தன்­மூ­லம் கிரு­மி­யின் நோயரும்­பு­கா­லம் முடிவு­க்கு வரும். கொரோனா கிருமி 14 நாட்­க­ளுக்கு நோயைப் பரப்­பும் தன்­மை­யைக் கொண்­டி­ருக்­கும் என சுகா­தார நிபு­ணர்­கள் தெரி­வித்­தி­ருப்­பது நினை­வு­கூ­ரத்­தக்­கது.