மலேசியர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய இன்று முதல் தடை

மலேசியர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய இன்று முதல் தடை

2 mins read
58d9ab50-650b-4636-978f-b31cf2e0cc86
சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் பலர் நேற்று ்்தங்கள் உடமை களுடன் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியைக் கடந்து வருகின்ற னர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஒவ்­வொரு நாளும் சிங்­கப்­பூ­ருக்கு வேலைக்­காக பய­ணம் செய்­யும் மலே­சி­யர்­கள் இன்று முதல் இம்­மா­தம் 31ஆம் தேதி வரை சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய முடி­யாது என்று மலே­சி­யா­வின் குடி­நு­ழை­வுத்­துறை தலைமை இயக்­கு­நர் கைருல் டிசைமி டாவூட் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

பிர­த­மர் முகை­தீன் யாசின் அறி­வித்த நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை, மலே­சி­யர்­களை வெளி­நாட்­டிற்கு செல்லத் தடை­செய்­துள்­ளது.

"நாளை (மார்ச் 18) முதல் மார்ச் 31 வரை இது அனு­ம­திக்­கப்­ப­டாது" என்று மலே­சி­யா­கினி செய்­தித் தளத்­துக்கு வாட்ஸ்­அப் வழி­யாக திரு கைருல் நேற்று முன்­தி­னம் கூறி­யி­ருந்­தார்.

ஜோகூ­ரில் வசித்து சிங்­கப்­பூ­ரில் பணி­யாற்­றும் மலே­சி­யர்­கள் குறித்து எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு அவர் பதி­ல­ளித்­தார்.

மலே­சிய தேசிய பாது­காப்பு மன்­றம் நேற்று வெளி­யிட்ட அறிக்கை இதை மேலும் உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தது.

மலே­சி­யர்­கள் வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்ல தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்விதிமுறை நாள்­தோ­றும் வேலை மற்­றும் கல்வி தொடர்­பாக சிங்­கப்­பூ­ருக்­குள் நுழை­யும் அனை­வ­ருக்­கும் பொருந்­தும் என்று மன்­றம் விளக்­கம் அளித்­தது.

அதே நேரத்­தில் வெளி­நாட்­டி­லி­ருந்து திரும்பி வரு­ப­வர்­கள் சுகா­தா­ரச் சோத­னை­கள் மற்­றும் தனி­மைப்­ப­டுத்­த­லுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

கொவிட்-19 பர­வ­லைத் தடுக்க நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணையை பிறப்­பிக்­கப்­போ­வ­தாக மலே­சி­யப் பிர­த­மர் முகை­தின் நேற்று முன்­தி­னம் இரவு அறி­வித்­தார்.

அந்த அறி­விப்­புக்­குப் பிறகு, ஜோகூர் மாநில ஸ்டூ­லாங் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரான ஜன­நா­ய­கச் செயல் கட்­சி­யின் திரு ஆண்ட்ரூ சென் கா எங், ஜோகூர் குடி­நு­ழை­வுத் துறை இயக்­கு­நர் பஹாருடின் தாஹிரை அழைத்து இது குறித்து விசா­ரித்­த­தா­க­வும் நிலம் வழி­யாக சிங்­கப்­பூ­ருக்கு வேலைக்­கா­க­வும் கல்­விக்­கா­கவும் நுழை­யும் அனைத்து மலே­சி­யர்­களும் இந்­தத் தடை­யால் பாதிக்­கப்­ப­டு­வார்­கள் என்று அவர் உறு­திப்­ப­டுத்­தி­ய­தா­க­வும் தமது ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

மலே­சியா அறி­வித்­தி­ருக்­கும் இந்த நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ரவு, சமய, விளை­யாட்டு, சமூக மற்­றும் கலா­சார நிகழ்­வு­கள் உட்­பட அதி­க­மா­னோர் கூடும் நிகழ்ச்­சி­க­ளுக்­குத் தடை விதிக்­கிறது.

வழி­பாட்டு இடங்­களும் வர்த்­தக நிறு­வ­னங்­களும் மூடப்­பட்­டி­ருக்­கும். ஆனால், பேரங்­கா­டி­கள், ஈரச் சந்­தை­கள், பல்­பொ­ருள் அங்­கா­டிக் கடை­கள் போன்­றவை திறந்­தி­ருக்­கும்.

மலே­சி­யா­வின் அனைத்­துப் பள்­ளி­களும் பல்­க­லைக்­க­ழ­கங்­களும் அடுத்த இரண்டு வாரங்­க­ளுக்கு மூடப்­பட்­டி­ருக்­கும்.

அத்­தி­யா­வ­சிய சேவை­களில் ஈடு­பட்­டுள்ள நீர், மின்­சா­ரம், எரி­சக்தி, தொலைத்­தொ­டர்பு, தபால், போக்­கு­வ­ரத்து, நீர்ப்­பா­ச­னம், எண்­ணெய், எரி­வாயு, எரி­பொ­ருள், மசகு எண்­ணெய், ஒலி­ப­ரப்பு, நிதி, வங்கி, சுகா­தா­ரம், மருந்­த­கங்­கள், தீய­ணைப்பு, சிறைச்­சா­லை­கள், துறை­மு­கங்­கள், விமான நிலை­யங்­கள், பாது­காப்பு, துப்­பு­ரவு, சில்­லறை தொழில் மற்­றும் உண­வுப் பொருட்­கள் ஆகி­ய­வற்­றைத் தவிர ஏனைய அரசு மற்­றும் தனி­யார் வளா­கங்­கள் மூடப்­படும் என்று நேற்று முன்தினம் பிரதமர் முகைதீன் கூறியிருந்தார்.

இதற்கிடையே, மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்றால் இருவர் மடிந்துவிட்டனர்.

முத­லா­ம­வர் சர­வாக்­கைச் சேர்ந்த 60 வயது தேவா­ல­யப் பாதி­ரி­யார். அவர் நேற்­றுக் காலை 11 மணிக்கு மர­ண­முற்­றார். மற்­ற­வர், ஜோகூர் பெர்­மாய் மருத்­து­வ­ம­னை­யில் உயிர் நீத்த 34 வயது ஆட­வர். அவர் கோலா­லம்­பூர் சமய நிகழ்­வுக்­குச் சென்­றி­ருந்­தார்.

மலே­சி­யா­வில் இது­வரை 673 கொரோனா கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.