சிங்கப்பூரில் நேற்று புதிதாக 23 பேருக்கு கொவிட்-19 கிருமி தொற்றி யதாக சுகாதார அமைச்சு அறிவித்தது. இவர்களில் 18 பேர் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஆசியான் நாடுகளுக்குச் ெசன்று வந்தவர்கள் என்றும் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் சிங்கப்பூர்வாசிகள் மற்றும் நீண்டகால அனுமதி அட்டைதாரர்கள் என்றும் கூறப்பட்டது. புதிய நோயாளிகளையும் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 455க்கு அதிகரித்தது. நால்வர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் இவர்களையும் சேர்த்து இதுவரை 144 பேர் கிருமித்தொற்றில் இருந்து முழுமையாக விடுபட்டு உள்ளதாகவும் அைமச்சு தெரிவித்தது.
புதிதாக 23 பேருக்கு கிருமித்தொற்று
1 mins read
நியூயார்க் நகரில் இருந்து சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் வந்து இறங்கிய பயணிகள். படம்: ஓங் வீ ஜின் -

