மேலும் 66 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று

மேலும் 66 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று

1 mins read
86c32135-8e93-43e8-865c-168e4b4dbb30
லிட்டில் ஜெம்ஸ் பிரிஸ்கூல் என்ற ஆரம்பப்பள்ளி, கொவிட் நோய்ப்பரவல் இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. -

சிங்கப்பூரில் மேலும் 66 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் ஒருவருக்கு வெளிநாட்டிலும் எஞ்சியோருக்கு சிங்கப்பூரிலும் இந்நோய் தொற்றியுள்ளதாகவும் அமைச்சு நேற்று கூறியது.

இதனுடன் சிங்கப்பூரில் பதிவாகியுள்ள மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 1375க்கு உயர்ந்துள்ளது.

அத்துடன், மேலும் இரண்டு கிருமித்தொற்றுக் குழுமங்களையும் சுகாதார அமைச்சு புதிதாக அடையாளப்படுத்தியுள்ளது. முதலாவது இடமான அங் மோ கியோ ஸ்திரீட் 62லுள்ள லிட்டில் ஜெம்ஸ் ஆரம்பப் பள்ளியில் மூன்று பேருக்கும் இரண்டாவது இடமான கிராஞ்சி லாட்ஜ் என்ற வெளிநாட்டு ஊழியர்களின் தங்குமிடத்தில் மூன்று பேருக்கும் இக்கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.