மற்றொரு தாதிமை இல்லத்தில் கொரோனா கிருமித்தொற்று

மற்றொரு தாதிமை இல்லத்தில் கொரோனா கிருமித்தொற்று

1 mins read
4385e047-5148-479d-b85a-c823dc28e2b9
(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

சிங்கப்பூரில் மற்றொரு தாதிமை இல்லத்தில் புதிதாக கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

2 உட்லண்ட்ஸ் ரைஸிலுள்ள வேன்கார்ட் ஹெல்த்கேர்ஸ் உட்லண்ட்ஸ் பராமரிப்பு இல்லத்தின் 77 வயது ஆண் இல்லவாசிக்கு இந்நோய்த் தொற்றியதாக திங்கட்கிழமை உறுதி செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள 2561ஆவது நபரான இவர், தற்போது கூ டெக் புவாட் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பராமரிப்பு இல்லத்திற்கு உதவ சுகாதார அமைச்சுடன் இணைந்து பணியாற்றுவதாக ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு தனது அறிக்கையில் கூறியது.

அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்த இல்லத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள் நன்றாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது.