எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டுத் திரும்பிய முதல் சிங்கப்பூர் தமிழரும் மருத்துவருமான திரு குமரன், கொவிட்-19 பற்றிய முக்கியமான தகவல்களை வெளிநாட்டு ஊழியர்களுக்காக காணொளி வடிவில் பதிவு செய்துள்ளார்.
அதனை மனிதவள அமைச்சு தமது ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவு செய்துள்ளது.
கொரோனா கிருமித்தொற்று கண்டிருப்போர் அறிகுறி ஏதுமில்லாமலும் இருக்கலாம் என்றும் அவர்கள் தும்மும்போதோ, இருமும்போதோ அவர்களிடமிருந்து கிருமி பரவலாம் என்பதையும் வலியுறுத்தியிருக்கும் அவர், முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று கூறியுள்ளார்.
அத்துடன், பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறும் கோரியுள்ளார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளைக் குறிப்பிட்ட அவர், அனைவரும் இணைந்து கொரோனா தொற்றை முறியடிப்போம் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
தனித்திருந்து, ஆலோசனைக் குறிப்புகளை ஏற்று நடந்து மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப உதவுவது ஒவ்வொருவரின் கடமை என்பதை நினைவில் கொள்வோம்!
காணொளி: டான் டோக் செங் மருத்துவமனை

