சிங்கப்பூரில் மேலும் 596 கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றுடன் இந்நாட்டின் மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 6,588க்கு அதிகரித்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி அட்டையுள்ள வெளிநாட்டு ஊழியர்கள். இருந்தபோதும், 25 சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கு இந்நோய் புதிதாகத் தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் வெளியிட்ட தன் அறிக்கையில் குறிப்பிட்டது.
இந்நோயின் காரணமாக ஏற்பட்டுள்ள உடல்நல சிக்கல்களால் சிங்கப்பூரில் இதுவரை மொத்தம் 11 பேர் இறந்துள்ளனர்.
புதிய கிருமித்தொற்றுகள் குறித்த மேல் விவரங்களை இன்றிரவு வெளியிடும் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

