கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான சிங்கப்பூரின் போராட்டத்தில் அடுத்த சில நாட்கள் மிகவும் முக்கியமானவை என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்திருக்கிறார். நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடி நடவடிக்கைகள் நடைமு-றக்கு வந்து இன்றுடன் 12 நாட்களாகிவிட்டன. இந்த நிலையில், கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி இருப்பதாக பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பக்கம் மூலமாகக் குறிப்பிட்டுள்ளார்.
"ஆனாலும், கிருமித்தொற்று தொடரும் வகையில் சமூகத்தில் மறைந்திருக்கும் பாதிப்பு இன்னும் நம்மை கவலையில் ஆழ்த்துவதாக உள்ளது," என்று திரு லீ கூறியுள்ளார்.
"அடுத்த சில நாட்கள் மிக முக்கியமானவையாக இருக்கும். கொரோனா கிருமியை ஒழிக்க நாம் எல்லாரும் நமது பங்கை ஆற்றவேண்டும்," என்று பிரதமர் வலியுறுத்தியிருக்கிறார்.
சிங்கப்பூரில் இதுவரை பதிவாகியுள்ள கிருமித்தொற்றுச் சம்பவங்களில் பாதிக்கு மேற்பட்டவை, தங்கும் விடுதிகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களுடன் தொடர்புடையவை. அது குறித்தும் பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

