சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி கூடுதலாக 1, 426 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையும் சேர்த்து இந்நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,014க்கு அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தில் கிருமித்தொற்று தொடங்கியது முதல் ஒரே நாளில் பதிவான புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் இதுவே ஆக அதிகம்.
புதிதாக பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் தங்கும் விடுதிகளிலிருந்த வெளிநாட்டு ஊழியர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் 16 பேரும் இன்றைய எண்ணிக்கையில் அடங்குவர்.
இதனுடன் சிங்கப்பூரில் இக்கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,104ஆகக் கூடியுள்ளது.

