மேலும் மூன்று புதிய கிருமித்தொற்று குழுமங்கள்

மேலும் மூன்று புதிய கிருமித்தொற்று குழுமங்கள்

1 mins read
3b6b6efc-e34c-4459-940f-518aab166581
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மேலும் புதிதாக மூன்று கிருமித்தொற்றுக் குழுமங்களை சுகாதார அமைச்சு திங்கட்கிழமை (ஏப்ரல் 20ஆம் தேதி) அறிவித்துள்ளது.

இவற்றில் ஒன்று ஜூரோங் அபார்ட்மண்ட்சுடன் தொடர்புடையது. இரண்டாவது குழுமம் உட்லண்ட்ஸ் லாட்ஜ் 11 தங்குமிடத்திற்கும் மூன்றாவது குழுமம் 8 சுங்கை கடுட் லூப்பிற்கும் தொடர்புடையவை.

இன்று அறிவிக்கப்பட்ட புதிதாக கிருமித்தொற்றிய 1,426 பேரில் 1,369 பேர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கின்றனர். புதிய சம்பவங்களில் 18 பேர் சிங்கப்பூரர்களாகவும் நிரந்தவாசிகளாகவும் உள்ளனர். எஞ்சி 32 வேலை அனுமதி அட்டைதாரர்கள் ஊழியர் தங்கும் விடுதியில் தங்கவில்லை.

புதிதாக அறிவிக்கப்பட்ட நோயாளிகளில் எவருக்கும் வெளிநாட்டில் கிருமித்தொற்று ஏற்படவில்லை.

தற்போது எஸ்11 டார்மிட்டரி பொங்கோல் சிங்கப்பூரின் ஆகப் பெரிய நோய்ப்பரவல் குழுமமாக உள்ளது. அங்கு 1,500க்கும் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

திங்கட்கிழமையின் எண்ணிக்கையுடன் சேர்த்து சிங்கப்பூரின் கொவிட்-19 கிருமித்தொற்றுச்சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 8,014ஆக உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, சிங்கப்பூரின் வெளிநாட்டு ஊழியர் தங்குமிடங்களில் தங்கியுள்ள 323,000 வெளிநாட்டு ஊழியர்களில் இதுவரை 1.46 விழுக்காட்டினருக்கு இந்நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் கொரோனா கிருமித்தொற்று எண்ணிக்கை இந்தோனீசியாவையும் பிலிப்பீன்சையும் மிஞ்சி தற்போது தென்கிழக்காசியாவில் ஆக அதிகமாக உள்ளது.

இதற்கிடையே கூடுதலாக 33 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது. இதனுடன் சிங்கப்பூரில் இந்நோயிலிருந்து குணமானோரின் எண்ணிக்கை 801 ஆக உயர்ந்துள்ளது. இந்நோயால் சிங்கப்பூரில் இதுவரை 11 பேர் இறந்துள்ளனர்.