லியாங் ஃபூட் கேட்டரர் நிறுவனத் தின் விற்பனைகள் கடந்த வாரம் சுமார் 80 விழுக்காடு குறைந்துள்ளது. ஆயினும் அதன் பொது நிர்வாகி ஃபூ ஸி யாங், வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு தயாரித்து சமூகத்திற்கு தம்மால் ஆனதைச் செய்து வருகிறார்.
சோறு, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களைக் கொண்ட மதிய உணவு, இரவு உணவு ஆகியவற்றைத் தயாரிக்கும் இந்நிறுவனம் நாள்தோறும் வெளிநாட்டு ஊழியர் களுக்கு விநியோகம் செய்கிறது.
"இது பிறருக்கு உதவுவது பற்றியது. பெறுவதைவிட கொடுப்பதே சிறந்தது," என்றார் திரு ஃபூ.
'புரோஜெக் பெலாஞ்சா' என்ற திட்டத்தின்கீழ் இவர் இதனைச் செய்கிறார். 'புளோசம் வர்ல்ட் சொசைட்டி' நன்கொடை அமைப்பும் சிங்கப்பூரின் உணவகங்கள் சங்கமும் இத்திட்டத்தை நடத்துகின்றனர். சிங்கப்பூரில் தற்போது கிருமிப்பரவலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு இந்தத் திட்டம் உதவி செய்கிறது.
உணவு தேவைப்படும் ஊழியர்கள் 'இட்ஸ்ரெய்னிங்கோட்ஸ்' என்ற சமூக வர்த்தக அமைப்புடன் தொடர்பு கொள்ளலாம். அவர்களது வேண்டுகோள்கைளை 'இட்ஸ்ரெய்னிங்கோட்ஸ்' தொகுத்து சிங்கப்பூர் உணவகச் சங்கத்திற்கு அனுப்பிவைக்கும்.
'புரோஜெக்ட் பெலாஞ்சா' இதுவரை 597, 600க்கும் அதிகமான தொகையை தனியார் கொடையாளிகளிடமிருந்து பெற்றுள்ளது.

