புயலால் தாஜ் மகாலின் சில பகுதிகள் சேதம்

புயலால் தாஜ் மகாலின் சில பகுதிகள் சேதம்

1 mins read
30c00585-e3b4-4aeb-bcef-3951ee35e884
(படம்: ஏஎப்பி) -

வட இந்தியாவை உலுக்கிய புயல் ஒன்றால் தாஜ் மகால் வளாகத்தின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்துள்ளன. முகலாய மன்னர் ஷாஜகான் கட்டிய அக்கட்டடத்தின் பிரதான நுழைவாயிலும் அதன் ஐந்து குவிமாடங்களுக்குக் கீழ் உள்ள தடுப்புச்சட்டமும் உடைந்திருப்பதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

கொரோனா கிருமிப்பரவலை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, இந்தியாவின் பிரபல சுற்றுப்பயணத் தளமான தாஜ் மகால், மார்ச் மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகளைச் சரிசெய்ய ஊழியர்கள் பணியாற்றுவதைக் காட்டும் படங்கள் இணையத்தில் தற்போது வலம் வருகின்றன.

இருந்தபோதும் தாஜ்மகாலின் பிரதான பகுதிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று இந்தியத் தொல்லியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.