வஞ்சகத்தால் இறந்த யானைக்காக அநேகர் கண்ணீர்

வஞ்சகத்தால் இறந்த யானைக்காக அநேகர் கண்ணீர்

1 mins read
b7b7d665-97d1-45c4-afcd-8f8704809590
(படம்: இந்திய ஊடகம்) -

அன்னாசிபழத்திற்குள் பட்டாசுகளை மறைத்து வைத்து கர்ப்பிணி யானையை சிலர் கொன்ற சம்பவத்தின் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

கேரளாவின் மலப்புரம் வனத்தையொட்டிய பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்ததால் இந்த வெறிச்செயல் செய்யப்பட்டிருக்கக்கூடும் என ஊகிக்கப்படுகிறது. ஆற்றுக்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிக்கு வந்த அந்த பெண் யானையை, அப்பகுதி மக்கள், பட்டாசுகள் நிரப்பிய பைன் ஆப்பிள் பழத்தை சாப்பிட அளித்தனர்.

பட்டாசு வெடித்தபின் யானையின் வாய் மற்றும் நாக்குப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயத்தின் மீது ஈ உள்ளிட்ட பூச்சிகள் அண்டாமல் இருக்க யானை ஆற்றில் நின்று தண்ணீரை வாயில் தெளித்துக்கொண்டே இருந்துள்ளது. பட்டாசு வாய் மற்றும் நாக்கில் ஏற்படுத்திய படுகாயத்தால் அந்த யானை உணவு உட்கொள்ள முடியாமல் சில நாட்கள் கழித்து அந்த யானை உயிரிழந்துள்ளது.

ஆற்றில் நின்றுகொண்டிருந்த யானையை மீட்க சிலர் வேறு இரண்டு யானைகளைப் பயன்படுத்த முயன்றனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியுற்றது.இந்தச் சம்பவத்தால் பலர் மனமுடைந்து சமூக ஊடகங்களில் தங்களது வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.