லிட்டில் இந்தியா கடை வீட்டில்  கொரோனா பரவல்

கொரோனா கிருமியைத் தொற்றியதாக நேற்று உறுதி செய்யப்பட்ட 517 பேரில் 15 பேர் சமூகப் பரவலால் பாதிப்பு அடைந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இந்த 15 பேரில் பதின்மூவர் லிட்டில் இந்தியா வட்டாரத்திலுள்ள வீராசாமி கடை வீட்டில் வசித்ததாக  சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த 13 பேரில் ஒருவர் நிரந்தரவாசி என்றும் எஞ்சியோர் வேலை அட்டைதாரர்கள் என்றும் அமைச்சு கூறியது. முன்னதாக இந்நோய் இருப்பது உறுதி செய்யப்பட்ட ஒருவருடன் ( சம்பவம் 33273) இவர்கள் அங்கு தங்கியதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நிரந்தரவாசி, முன்னதாக உறுதி செய்யப்பட்ட இரண்டு பேருடன் (சம்பவங்கள் 21538 மற்றும் 29273) குடும்ப தொடர்பு உள்ளவர்கள். மே ஏழாம் தேதி முதல் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.