சுகாதார அமைச்சின் பட்டியலில் முஸ்தஃபா

1 mins read
ae58ab85-9c15-4608-825d-cbdeb2bc9e4d
The closed sign came up at Mustafa Centre at midnight on April 3. PHOTO: DESMOND WEE -

கொவிட்-19 நோயாளிகள் சென்றிருந்த இடங்களுக்கான சுகாதார அமைச்சின் பட்டியலில் முஸ்தஃபா நிலையமும் தெம்பனீஸ் கடைத்தொகுதியும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

கொரோனா இருப்பதாக உறுதி செய்யப்பட்ட ஒருவர் வியாழக்கிழமையன்று (ஜூன் 4ஆம் தேதி) பிற்பகல் 3 மணி முதல் நான்கு மணி வரை முஸ்தஃபா நிலையத்திற்குச் சென்றிருந்தார். இவரைப் போல மற்றொருவர், தெம்பனீஸ் கடைத்தொகுதிக்கு ஜூன் இரண்டாம் தேதியன்று பிற்பகல் 2.45 மணி முதல் 3.25 மணி வரை சென்றார்.

நோயாளியாக உறுதி செய்யப்பட்ட மற்றொருவர் மே 26ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை கேலாங் சிராய் சந்தை மற்றும் உணவு நிலையத்திற்குச் சென்றிருந்ததாக சுகாதார அமைச்சு கூறியது.

இன்று புதிதாக 383 பேரை கொரோனா தொற்றியிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன், இந்நாட்டின் மொத்த கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 37,910க்கு உயர்ந்தது.