சிங்கப்பூரில் புதிதாக 386 பேரை கொரோனா கிருமி தொற்றியுள்ளது. இதனுடன் சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 38,296க்கு அதிகரித்துள்ளது.
புதிய சம்பவங்களில் இரண்டு சமூக அளவிலானவை. இந்த இருவரில் ஒருவர் சிங்கப்பூரர் என்றும் மற்றொருவர் வேலை அனுமதி அட்டை உள்ளவர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மற்றவர்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவர்கள்.

