மாறுபட்ட பிரசாரங்களுக்கு கட்சிகள் தயாராக வேண்டும்

அரசியல் கட்சிகள் மிகவும் மாறுபட்ட பொதுத் தேர்தல் பிரசாரங்களுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று
தேர்தல் துறை தெரிவித்துள்ளது.

பெரிய எண்ணிக்கையிலான வாக்காளர்களுடன் நேரடித் தொடர்புகளை அவை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அது கூறியது. பிரசார செய்திகளை வாக்காளர்களிடம் கொண்டுசேர்க்க இணையம் உள்ளிட்ட சில மாற்றுத் தளங்களை கட்சிகள் ஆராய வேண்டும் என்று தேர்தல் துறை சொன்னது. கொவிட்-19 சூழலால் பிரசாரங்கள், தொகுதி உலா உள்ளிட்டவை நடைபெற கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்பதே அதற்குக் காரணம்.

பிரசார விதிமுறைகள் இன்னும் தயாராக இல்லை என்று கூறிய தேர்தல் துறை , தேர்தல் தேதிக்கு நெருக்கத்தில் அவை வெளியிடப்படும் என்று சொன்னது. கொவிட்-19 நோய்ப் பரவல் சூழல் மாறிக்கொண்டே இருப்பதால் பாதுகாப்பான இடைவெளி நடைமுறைகள் குறித்து நடப்பில் உள்ள விதிமுறைகளைப் பிரசார வழிகாட்டிகள் கருத்தில்கொள்ள வேண்டும் என்று அது விவரித்தது.

இதன் காரணத்தால் பிரசார விதிமுறைகள் தேர்தல் நெருக்கத்தில் வெளியிடப்படும் என்று தேர்தல் துறை விளக்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!