'எஃப் 1' பந்தயம் ரத்து

1 mins read
e8ffdca8-9451-4404-8bec-ed60d8f6e010
-

சிங்கப்பூரில் வரும் 'எஃப் 1' பந்தயம் ரத்து செய்யப்படும் என அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வரும் செம்டம்பர் மாதம் 20ஆம் தேதி நடைபெறவேண்டிய இந்தப் போட்டி தள்ளிவைக்கப்படும் என்பதே பரவலான எதிர்பார்ப்பாக இருந்தது.

இப்பந்தயத்திற்கான இடத்தை அமைப்பதற்கான பணிகள் மே மாதத்தில் தொடங்குவது வழக்கம். கட்டுமானங்களுக்கான தடைகள், நடமாட்டத் தடைகள், அனைத்துலக பயணத் தடைகள் ஆகியவற்றால் இந்தப் பந்தயத்தைத் தொடர்ந்து நடத்த இயலவில்லை என்று சிங்கப்பூர் கிராண்ட் பிரீ அமைப்பு தெரிவித்தது.

இதற்கு நுழைவுச்சீட்டுகளை வாங்கியோருக்குப் கட்டணம் திருப்பித் தரப்படும் என்று அந்த அமைப்பு கூறியது.