இன்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 347 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 40,197க்கு உயர்ந்துள்ளது.
சமூக அளவில் இந்நோயை தொற்றியுள்ள ஐவரில் இருவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். மூவர் வேலை அட்டைதாரர்கள்.
பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவர்கள்.

