புதிதாக 218 பேருக்கு கொரோனா

சிங்கப்பூரில் புதிதாக 218 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனுடன் இங்கு இந்நோயால் பாதிப்பு அடைந்த பேரின் எண்ணிக்கை 41,833க்கு உயர்ந்துள்ளது.

சமூக அளவில் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் மேற்கூறப்பட்ட எண்ணிக்கையில் அடங்குவர். இவர்கள் இருவரும் வேலை அட்டைதாரர்கள் என்று சுகாதார அமைச்சு இன்று தெரிவத்தது. எஞ்சியோர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவர்கள்.