ஆசியாவில் வானத்தை மங்க வைக்கும் அரிய கிரகணம்

நாளை நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தால் வானத்தில் தென்படும் நெருப்பு வளையத்திற்காக பலர் காத்திருக்கின்றனர்.

இது ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இருமுறை நடைபெறுகிறது.  மேற்கு ஆப்பிரிக்கா, அரேபிய தீபகற்பம், இந்தியா, தென் சீனா ஆகிய இடங்களில் வசிப்போதை இதனை வெவ்வேறு நிரங்களில் காணலாம். மற்ற நாடுகளில் இருப்பவர்கள் சூரியனின் பிரகாசம் குறைவதைக் காண்பார்கள். ஆனால் அவர்களால் நெருப்பு வளையத்தைக் காண இயலாது.

இந்த கிரகணம் நான்கு மணி நேரத்திற்குக் குறைவாக நீடிக்கும். 

இதுபோன்ற மற்றொரு சூரிய கிரகணம் இவ்வாண்டு டிசம்பர் 14ஆம் தேதி தென்னமெரிக்காவில் காணப்படும்.

புறவூதாக் கதிர்களால் சூரிய கிரகணத்தைக் கருவிகளின்றி வெறும் கண்களால் காண்பது ஆபத்தானது என்று விண்வெளி ஆய்வாளர் திரு ஃபிளோரண்ட் டெலஃபி ஏஎப்ஃபி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.