சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூரர்கள் துணைநிற்க நெருக்கடியை வெல்வோம்

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்: வலுமிக்க சமூகமாக மீண்டெழுவோம்

சிங்­கப்­பூர் தற்­போ­தைய நெருக்­க­டியை வெற்றி­ கொள்­வ­தோடு மேலும் வலு­வ­டைந்த சமூ­க­மாக மீண்­டெ­ழும் என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் தமது தேசிய உரை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இத­னைச் சாதிக்க அர­சாங்­கத்­துக்­கும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் இடை­யி­லான பங்­கா­ளித்­து­வம் துணை­பு­ரி­யும் என்­றும் கொள்­ளை­நோய், மோச­ம­டைந்த பொரு­ளி­யல் ஆகிய இரட்டை மிரட்­டலை எதிர்­கொள்ள அந்­தப் பங்­கா­ளித்­து­வம் அதிக முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது என்­றும் அவர் தெரி­வித்­தார். அர­சாங்­கக் கரு­வூ­லக் கட்­ட­டத்­தி­லி­ருந்து அவர் ஆற்­றி­யது சிங்­கப்­பூ­ரின் ஆறா­வது, இறுதி தேசிய உரை­யா­கும்.

கொரோனா கிரு­மிக்­குப் பிந்­திய நாட்­டின் எதிர்­கா­லம் தொடர்­பில் இந்த தேசிய உரைத் தொடர் அமைந்­தது. சிங்­கப்­பூ­ரர்­களும் அர­சாங்­க­மும் ஒன்­றி­ணைந்து எதிர்­கா­லத்தை வடி­வ­மைக்­கும் திட்­டங்­கள் குறித்த அறி­விப்பை திரு ஹெங் வெளி­யிட்­டார்.

அடிப்­படை, செயல்­முறை ஆய்­வு­களை ஆத­ரிக்க 20 பில்­லி­யன் வெள்ளி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. உல­கம் எதிர்­நோக்­கும் பெரும் சவால்­க­ளுக்கு முன்­னோ­டித் தீர்­வு­க­ளைக் கண்­ட­றிய நமது மக்­களை ஒன்­று­தி­ரட்­டும் வகை­யில் புத்­தாக்­கச் சவால்­களை ஒரு தொட­ரா­கத் தொடங்க இருக்­கி­றோம்.

“‘ஒரு தலை­மு­றைக்­கான நெருக்­கடி’யைச் சமா­ளிக்­கும் வகை­யி­லான ஆத­ர­வுத் திட்­டங்­க­ளுக்­காக அர­சாங்­கம் ஏற்­கெ­னவே கிட்­டத்­தட்ட $100 பில்­லி­யனை ஒதுக்கி உள்­ளது.

“நூறு நாட்க­ளுக்­குள் அடுத்­த­டுத்து நான்கு வர­வு­செ­ல­வுத் திட்­டங்­களை தாக்­கல் செய்­வேன் என்று நான் ஒரு­போ­தும் எதிர்­பார்த்­தது இல்லை. நமது வர­லாற்­றில் அவ்­வாறு நிகழ்ந்­தது இல்லை. இந்த நட­வ­டிக்­கை­கள் மூலம் வலு­வா­ன­ திட்­டங்­களை முன்­வைத்­தி­ருக்­கி­றோம். நாம் இவ்­வாறு ெசய்­யா­வி­டில் பல்­லாண்டு வளர்ச்­சி­யை­யும் ஒட்­டு­மொத்த தலை­மு­றை­யை­யும் நாம் இழக்க நேர்ந்­தி­ருக்­கும்.

“இப்­போது நாம் ஒதுக்கி இருக்­கும் தொகை­யில் பாதிக்­கும் மேற்­பட்­டது நாட்­டின் கடந்த கால நிதி­யி­ருப்­பில் இருந்து பெறப்­பட்­டது. நமது முன்­னோ­டித் தலை­முறை சிங்­கப்­பூ­ரர்­க­ளின் சிர­மத்­தில் உரு­வான நிதி அது.

“அவர்­கள் சிந்­திய ரத்­தம், வியர்வை, கண்­ணீ­ரும் இந்த நிதி­யி­ருப்­பு­களை விட்­டுச் சென்­றுள்­ளன. எனவே, இந்த நெருக்­க­டி­யி­லி­ருந்து நாம் மீண்­ட­வு­டன் நமது தலை­மு­றை­யை­யும் நிதி­யி­ருப்­பு­க­ளை­யும் மீண்­டும் வள­மாக்க வேண்­டும் என்­பதை நாம் நினை­வில் கொள்­வோம்,” என்று கேட்­டுக்­கொண்­டார் நிதி அமைச்­ச­ரு­மான திரு ஹெங்.

வேலை­க­ளைக் காப்­ப­து­தான் இப்­போ­தைய உட­னடி நட­வ­டிக்கை என்று அவர் தமது உரை­யில் வலி­யு­றுத்­தி­னார்.

“குறைந்த வரு­மான ஊழி­யர்­கள் மீது நாம் சிறப்­புக் கவ­னம் செலுத்தி வரு­கி­றோம். வேலை நலன் திட்­டத்­தில் பயன்­பெ­று­வோர் தற்­போ­தைய நெருக்­க­டி­யைச் சமா­ளிக்க விரை­வில் கூடு­த­லான நிதி­யைப் பெற இருக்­கின்­ற­னர். அவர்­க­ளின் வாழ்க்­கைத்­தொ­ழிலை மேம்­ப­டுத்த முத­லா­ளி­க­ளு­ட­னும் தொழிற்­சங்­கங்­க­ளு­ட­னும் இணைந்து பாடு­ப­டு­கி­றோம்.

“இருப்­பி­னும் இந்த முயற்­சி­க­ளுக்­கும் அப்­பால் பலர் வேலை­களை இழக்­கக்­கூ­டும். அதனை கவ­னத்­தில் கொண்­டு­தான் இயன்ற வரை அதி­க­மான வேலை­களை உரு­வாக்க அர­சாங்­கம் பெரு­மு­யற்­சி­களை மேற்­கொண்டு வரு­கிறது. தேசிய வேலை­கள் மன்­றம் மூலம் 100,000 வேலை­க­ளை­யும் பயிற்சி வாய்ப்­பு­

க­ளை­யும் உரு­வாக்க நாம் இலக்கு வகுத்­துள்­ளோம்.

“நாம் செய்து வரும் வேலை­தான் நமது தலை­யாய முன்­னு­ரிமை. நமது வாழ்க்­கையை மேம்­ப­டுத்­த­வும் நமது அன்­புக்­கு­ரி­ய­வர்­களை ஆத­ரிக்­க­வும் வேலை ஒன்­று­தான் ஒவ்­வொரு சிங்­கப்­பூ­ர­ருக்­கும் நேர­டி­யாக உத­வக்­கூ­டி­யது.

“இந்த நோக்கத்துடன் நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றுவோம். நமது மக்கள் மீது முதலீடு செய்வோம். தொழிலாளர்களும் இளையர்களும் நிறைந்த தலைமுறையை இழந்துவிடக் கூடாது என்பதில் நாம் தீர்மான மாக இருக்கிறோம்,” என்று திரு ஹெங் தமது உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டார்.

தேசிய உரைத் தொடரை முடித்து வைத்துப் பேசிய அவர், பொருளியலை வளர்க்கவும் வேலைகளைக் காக்கவும் அரசாங்கம் கடப்பாடு கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

“நமது வருங்காலப் பயணம் நெடியது. அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கான நமது செயல் திட்டங்கள் இனி வர இருக்கும் பல ஆண்டுகளுக்கான நமது தேசத்தின் பாதையை வடிவமைக்கக்கூடியதாக இருக்கும்,” என்றார் அவர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon