சிங்கப்பூரில் கொரோனா - சமூக அளவில் 11 பேர் பாதிப்பு

சிங்கப்பூரில் புதிதாக மேலும் 213 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சிங்கப்பூரில் இந்நோயால் பாதிக்கப்பட்ட மொத்த பேரின் எண்ணிக்கை 43, 459 ஆக உள்ளது. சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ள  11 பேர் ஐவர் வேலை அட்டைதாரர்கள். எஞ்சிய அறுவர் சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசிகள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய நோயாளிகளில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர் தங்குமிடத்தில் வசிப்பவர்கள். மேல் விவரங்கள் இன்றிரவு வெளியிடப்படும்.