தொகுதியில்லா எம்.பி. பதவிகளைப் பாட்டாளிக் கட்சி ஏற்குமா? பதிலளிக்க துணைப் பிரதமர் வலியுறுத்து

சிங்கப்பூரின் அடுத்த நாடாளுமன்றத்தில் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ஏற்குமா என பாட்டாளிக் கட்சி வாக்காளர்களுக்குப் பதிலும் விளக்கமும் அளிக்க வேண்டும் என மக்கள் செயல் கட்சியின் முதலாம் உதவி தலைமைச் செயலாளர் ஹெங் சுவீ கியட் அறைகூவல் விடுத்துள்ளார்.

தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் திட்டத்தைப் பாட்டாளிக் கட்சி ஏற்றுக்கொள்கிறதா எனக் கேட்டார் துணைப் பிரதமருமான திரு ஹெங் சுவீ கியட். அப்படி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளே இல்லை எனும் நிலை இருக்காது என்றார் அவர்.

அத்துடன், தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டால் அதைப் பாட்டாளிக் கட்சி ஏற்றுக்கொள்ளுமா என்றும் துணைப் பிரதமர் கேட்டார்.

“கொள்கை அளவில் தொகுதியில்லா எம்.பி. முறையைப் பாட்டாளிக் கட்சி உண்மையிலேயே எதிர்ப்பதாக இருந்தால், இத்தனை ஆண்டுகளாக அக்கட்சி அந்தப் பதவியை ஏன் ஏற்றுக்கொண்டனர்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தொடக்கத்தில் இருந்தே பாட்டாளிக் கட்சி அந்தத் திட்டத்தை முழுவதும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு வந்திருக்கிறது என்றும் திரு ஸ்டீவ் சியா, திருமதி லீனா சியாம் ஆகியோரைத் தவிர்த்து மற்ற அனைத்து தொகுதி இல்லா எம்.பி. பதவிகளையும் பாட்டாளிக் கட்சியே ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.

திரு ஜெரல்ட் கியாம், திரு டெனிஸ் டான், திரு லியோன் பெரேரா, திரு யீ ஜென் ஜோங், கட்சித் தலைவர் திருவாட்டி சில்வியா லிம் ஆகிய தற்போதைய பாட்டாளிக் கட்சி வேட்பாளர்களும் தொகுதியில்லா எம்.பி.யாக இருந்துள்ளனர்.

“அடுத்த சனிக்கிழமை காலையில் தூங்கி எழுந்து பார்க்கும்போது, நான்கு குழுத் தொகுதிகளிலும் இரண்டு தனித் தொகுதிகளிலும் மசெக தோற்றுவிட்டது என அறிய வந்தால், சிங்கப்பூரர்கள் என்ன நினைப்பார்கள்? முதலீட்டாளர்களும் மற்ற நாடுகளும் என்ன நினைக்கும்?” என திரு ஹெங் கேட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக பாட்டாளிக் கட்சி வேட்பாளர்கள் தொகுதியில்லா எம்.பி. திட்டம் குறித்துக் குறைகூறி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களைப்போல தொகுதியில்லா எம்.பி.க்களுக்கும் முழு வாக்களிப்பு உரிமைகளை வழங்கும் விதமாக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, இந்தத் தேர்தலுக்குப் பின் தொகுதியில்லா எம்.பி.க்கள் உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குறைந்தது 12 பேர் நாடாளுமன்றத்தில் இருப்பர்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!