தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை பாட்டாளிக் கட்சி ஏற்குமா

தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவி சிங்கப்பூரின் அடுத்த நாடாளுமன்றத்தில் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ஏற்குமா என பாட்டாளிக் கட்சி, வாக்காளர்களுக்குப் பதிலும் விளக்கமும் அளிக்க வேண்டும் என மக்கள் செயல் கட்சியின் முதலாம் உதவி தலைமைச் செயலாளர் ஹெங் சுவீ கியட் வலியுறுத்தியுள்ளார்.

தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் திட்டத்தைப் பாட்டாளிக் கட்சி ஏற்றுக்கொள்கிறதா எனக் கேட்டார் துணைப் பிரதமருமான திரு ஹெங் சுவீ கியட். அப்படி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளே இல்லை எனும் நிலை இருக்காது என்றார் அவர்.

“வெளிப்படைத்தன்மை குறித்தும் பொறுப்புடைமை குறித்தும் பாட்டாளிக் கட்சி நிறைய பேசுகிறது. அதைத்தான் அவர்களும் செய்ய வேண்டியுள்ளது. வாக்காளர்களிடம் வெளிப்படையாகவும் பதில் சொல்லும் பொறுப்புடனும் இருக்க வேண்டும்,” என்று திரு ஹெங் கூறி இருக்கிறார்.

“கொள்கை அளவில் தொகுதியில்லா எம்.பி. முறையைப் பாட்டாளிக் கட்சி உண்மையிலேயே எதிர்ப்பதாக இருந்தால், இத்தனை ஆண்டுகளாக அக்கட்சி அந்தப் பதவியை ஏன் ஏற்றுக்கொண்டது?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தொடக்கத்தில் இருந்தே பாட்டாளிக் கட்சி அந்தத் திட்டத்தை முழுவதும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு வந்திருக்கிறது என்றும் திரு ஸ்டீவ் சியா, திருமதி லீனா சியாம் ஆகியோரைத் தவிர்த்து மற்ற அனைத்து தொகுதி இல்லா எம்.பி. பதவிகளையும் பாட்டாளிக் கட்சியே ஏற்றுக்கொண்டு உள்ளது என்றும் துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.

தொகுதியில்லா எம்.பி.க்களுக்கு நாடாளுமன்றத்தில் முழு வாக்களிப்பு உரிமைகளும் உண்டு என்பதை மீண்டும் அழுத்திச் சொன்ன திரு ஹெங், கட்சி உண்மையிலேயே காணாமல் போய்விடுமோ என்று பாட்டாளிக் கட்சி பயப்படுகிறதா என்றும் கட்சியை மேலும் விரிவுபடுத்தி, அதிக இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் அதன் உண்மையான நோக்கமா என்றும் கேட்டார்.

“அடுத்த நாடாளுமன்றத்தில் தொகுதியில்லா எம்.பி. பதவிகளை ஏற்பது குறித்து பதிலளிக்க பாட்டாளிக் கட்சி மறுத்து வருகிறது. அவர்கள் வாக்காளர்களுடன் விளையாடுகிறார்கள்,” என்றார் துணைப் பிரதமர்.

எதிர்க்கட்சிகள் மூன்றில் ஒரு பங்கு இடங்களில் வென்றுவிட்டாலும் மசெகவிற்கு இன்னும் வலுவான அதிகார உரிமை இருக்கும் என்ற பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கின் கூற்றை வாக்காளர்கள் கவனமாக ஆராய வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

“அடுத்த சனிக்கிழமை காலையில் தூங்கி எழுந்து பார்க்கும்போது, நான்கு குழுத் தொகுதிகளிலும் இரண்டு தனித் தொகுதிகளிலும் மசெக தோற்றுவிட்டது என அறிய வந்தால், சிங்கப்பூரர்கள் என்ன நினைப்பார்கள்? முதலீட்டாளர்களும் மற்ற நாடுகளும் என்ன நினைக்கும்?” என திரு ஹெங் வினா தொடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பாட்டாளிக் கட்சி வேட்பாளர்கள் தொகுதியில்லா எம்.பி. திட்டம் குறித்துக் குறைகூறி வருகின்றனர்.

கடந்த 1984ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தொகுதியில்லா எம்.பி. திட்டமானது, பொதுத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்ற எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு நாடாளுமன்றத்தில் இடமளித்து வரு கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!