தற்போது இருப்பதைவிட இன்னும் நியாயமான மேலும் சமநிலையான சமூகம் நிலவ வேண்டும் என சிங்கப்பூரர்கள் விரும்பினால், அதற்கு சமூகத்திலுள்ள ஒவ்வொரு வரும் பங்களிக்க வேண்டும் என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்றத்தாழ்வு இல்லாத இடமாக சிங்கப்பூர் நிலவ வேண்டுமெனில் அரசாங்கம், சமூகம் ஆகிய இரண்டின் செயல்பாடும் தேவை என்று சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தர்மன் கூறினார்.
'எல்லாரையும் உள்ளடக்கூடிய சமூகத்திற்கான உத்திகள்' என்ற தலைப்பில் நேற்று உரையாற்றிய மூத்த அமைச்சர், இது வெறும் இலக்குகளோ, அறிவிப்புகளோ, அரசியல் பிரகடனங்களோ அல்ல என்றார். உண்மையிலேயே இடம்பெற வேண்டிய திட்டங்கள் பற்றியது. எது பயனளிக்கும் என்பதை அறிந்து, தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருக்கும் இத்திட்டங்கள் ஒருபோதும் முழுமையடை யாது, ஆனால் நிலையான முன்னேற்றத்தைக் கொண்டிருக்கும்.
அதாவது, சுகாதாரப் பராமரிப்புக்கு அல்லது ஓய்வு காலத்துக்கு போதிய சேமிப்பு இருப்பதை உறுதிப்படுத்துவதை தனி ஒருவரின் பொறுப்பாக விட்டுவிடாமல் சமூக அளவில், வரக்கூடிய பாதிப்புகளை பகிர்ந்து பரந்த அளவில் பொறுப்பேற்றுக்கொள்வது ஆகும் என்று மக்கள் செயல் கட்சியின் ஃபேஸ்புக்கில் ஒளிபரப்பான உரையில் அவர் சொன்னார்.
தங்கள் நிதியை எவ்வாறு முதலீடு செய்வது அல்லது செலவழிப்பது என்பதை அவரவர் தீர்மானித்தால், சமூகத்தில் அதிக சமத்துவமின்மையே ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
வெள்ளிக்கிழமை இடம்பெறும் பொதுத் தேர்தலுக்கான பிரசாரங்க ளில் போதுமான ஓய்வூதியம் குறித்த பிரச்சினையை எதிர்க்கட்சியினர் எழுப்பி வருகின்றனர்.
மத்திய சேம நிதி வழங்கீடுகளை முன்னதாகவே தொடங்குவது அல்லது மெடிஷீல்ட் சந்தாவுக்கு மானியம் போன்ற சிங்கப்பூரர்களின் சுகாதார செலவினங்களில் அதிக பங்கை அரசாங்கம் ஏற்பது உள்ளிட்ட முதியவர்களுக்கு உதவுதற்கான "மிகச் சிறந்த வாக்குறுதிகளை" அளிக்கும் அரசியல்வாதிகள் ஒவ்வொரு தேர்தலிலும் இருப்பார்கள்.
ஆனால் இந்த நடவடிக்கைகளில் பல, அவர்கள் உதவ முயற்சி எடுக்கும் மக்களுக்கு, நடுத்தர வருமான குடும்பங்களின் வரி விகிதம் அதிகரிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். ஏனெனில் எதுவுமே இலவசமாக வருவதில்லை என அவர் கூறினார்.
சந்தை அடிப்படையிலான அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்த அமெரிக்கா போன்ற நாடுகளின் மக்கள்தொகையில் அடிமட்டத்தில் இருக்கும் மூன்றில் ஒரு பகுதியினர் ஓய்வு பெறும்போது சேமிப்பைக் காட்டிலும் அதிக கடனையே கொண்டிருக்கிறார்கள்.
அதேநேரத்தில் அரசியல் அழுத்தங்கள் காரணமாக முன்னதாகவே வழங்கீடுகளை வழங்க தமது சமூக பாதுகாப்பு அமைப்புகளை தாராளமயமாக்கிய டென்மார்க், பின்லாந்து போன்ற நாடுகள் இப்போது தங்கள் நடைமுறைகளை பழையநிலைக்கு மாற்ற முயற்சி செய்கின்றன என்றார் திரு தர்மன்.
சிங்கப்பூரின் மசே நிதி திட்டம், அதிகளவில் நீக்குப்போக்கை வழங்கும் வகையில் காலப்போக்கில் பரிணாமம் பெற்று வந்துள்ளது. மசே நிதி ஆயுள் வருடாந்திர உதவித் தொகை, மெடிஷீல்ட் லைஃப் அடிப்படை சுகாதார காப்புறுதி போன்ற திட்டங்களின் மையக் கோட்பாடு இன்னமும் குறைந்த, நடுத்தர வருமான குழுமங்களான அதிக உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுவ துதான் என்றார் அவர்.
அவரவர் தங்களுக்காக முடிவு செய்யும்பட்சத்தில் எப்படியாவது எல்லாமே நல்லபடியாகவே முடியும் எனக் கூறிவிட முடியாது. சிலர் தங்களை நன்கு கவனித்துக்கொள்வார்கள், ஒவ்வொரு சமூகத்திலும் பணக்காரர்கள் எப்படியாவது தங்களைக் கவனித்துக்கொள்ளவும், சிறப்பாகச் செயல்படவும் முடிகிறது. வசதி குறைந்தவர்கள் மேலும் சிரமமான சூழ்நிலைகளில் மாட்டிக்கொள்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனால்தான், 55 வயதிற்குப் பிறகு மசே நிதித் தொகைக்கு அதிக வட்டி, அடுத்த ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ள குறைந்த ஊதியம் பெறுவோர் ஓய்வு பெற்றதும் காலாண்டுக்கு ஒருமுறை $900 பெறக்கூடிய மேம்படுத்தப்பட்ட முதுமைக்கால ஆதரவுத் திட்டம் போன்றவை மூலம் மூப்படையும் காலத்தில் குறைந்த, நடுத்தர வருவாய் உள்ளவர்களுக்கு அரசாங்கம் கூடுதல் ஆதரவை வழங்குகிறது.
இதில் சமூகமும் பங்காற்ற வேண்டும் என்ற திரு தர்மன், பிரபல ஹொக்கியன் பாடலொன்றை மேற்கோளாகச் சுட்டினார். வாழ்க்கையில் நடப்பதில் 30 விழுக்காடு சொர்க்கத்திலும் 70 விழுக்காடு கடின உழைப்பிலும் தீர்மானிக்கப்படுகிறது என்பதுதான் பாடல் சொல்லும் விஷயம்.
மக்கள் தமக்காக கடினமாக உழைப்பது, பொறுப்பேற்பது, தங்கள் சொந்தக்காலில் நிற்பதில் பெருமிதம் கொள்வது போன்ற சமூக நற்பண்புகளை சிங்கப்பூர் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.
சொர்க்கத்தை நம்பியிருக்க முடியாது. மக்களே தங்களைக் காப்பாற்றிக்கொள்வார்கள் என்று விட்டுவிடவும் முடியாது. இங்கு, அந்த 30 விழுக்காடு சமூகமாக இருக்க வேண்டும் (முயற்சி).
அதாவது, சிங்கப்பூரர்கள் ஒரு வருக்கொருவர் பொறுப்பேற்பது. இதில் பொதுப்பயனீட்டு செலவினங்களுக்கு அதிக கட்டணம் செலுத்துவதும் அடங்கும். இத னால் குறைந்த வருமான ஊழியர்கள் முன்னேற முடியும். அனைவரும் ஒன்றாக உயர்வடையும் சிறந்த, சமநிலை சமுதாயத்தை உருவாக்குவதற்காக நாம் செலுத்தும் ஒரு சிறிய தொகை இது.ஒரு பிளவுபட்ட சமூகமாக நாங்கள் ஆகிவிட்டால், மேலும் அதிகம் செலுத்த வேண்டியிருக்கும். அதை நாம் தவிர்க்க வேண்டும் என திரு தர்மன் கூறினார்.
மேலும் செய்தி பக்.3ல்

