செங்காங்கில் புதிய நகர மன்றம்

ஏற்­கெ­னவே இயங்­கி­ வ­ரும் அல்­ஜு­னிட்- ஹவ்­காங் நகர மன்­றத்­ து­டன் இணைப்­ப ­தற்­குப் பதி­லாக செங்­காங் குழுத் தொகு­திக்­கா­கப் புதிய நகர மன்­றம் அமைப்­பது பற்றி யோசித்து வரு­வ­தாக பாட்­டா­ளிக் கட்சி தெரி­வித்­துள்­ளது. காணொளி மூலம் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் அக்­கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ளர் பிரித்­தம் சிங் இத்­த­க­வ­லைத் தெரி­வித்­தார்.

“பொரு­ளி­யல் அடிப்­ப­டை­யில் தனி நகர மன்­றம் கொண்­டி­ருப்­ப­தற்­கான அனைத்துத் தகு­தி­களும் செங்­காங்­கிற்கு இருக்­கிறது என நாங்­கள் நம்­பு­கி­றோம். முன்­னோக்­கிச் செல்­வ­தற்­கான எங்­க­ளது அணுகுமுறை இது. நிர்­வாக முக­வர்­க­ளு­டன் கலந்து பேசிய பின்­னர் இது குறித்து முடிவு எடுக்கப்­படும்,” என்று சிங் கூறி­னார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடந்து முடிந்த பொதுத் தேர்­த­லில், புதி­தாக உரு­வாக்­கப்­பட்ட செங்­காங் குழுத் தொகு­தியை பாட்­டா­ளிக் கட்சி கைப்­பற்­றி­யது. மக்­கள் செயல் கட்சி அணியை எதிர்த்­துப் போட்­டி­யிட்ட அக்­கட்சி அணி­யி­னர் 52.13 விழுக்­காடு வாக்­கு­க­ளைப் பெற்று வெற்றி பெற்­ற­னர்.

2011ஆம் ஆண்­டில் நடை­பெற்ற பொதுத் தேர்­த­லில் அல்­ஜு­னிட் குழுத் தொகு­தி­யில் பாட்­டா­ளிக் கட்சி முதல்­மு­றை­யாக வென்­ற­தைத் தொடர்ந்து, அல்­ஜு­னிட் குழுத் தொகு­திக்­கான நகர மன்­ற­மும் ஹவ்­காங் தனித் தொகு­திக்­கான நகர மன்­ற­மும் ஒன்­றி­ணைக்­கப்­பட்­டன.

பின்­னர் 2013ஆம் ஆண்­டில் நடை­பெற்ற பொங்­கோல் ஈஸ்ட் தனித் தொகு­தி­யில் பாட்­டா­ளிக் கட்சி வெற்­றி பெற்­றதை அடுத்து அல்­ஜு­னிட்-ஹவ்­காங்-பொங்­கோல் ஈஸ்ட் என அக்­கட்­சி­யின் கட்­டுப்­பாட்­டில் இருந்த நகர மன்றம் விரி­வாக்­கம் கண்­டது. ஆனால், மக்­கள் செயல் கட்­சி­யி­ட­மி­ருந்து பாட்­டா­ளிக் கட்­சிக்கு அல்­ஜு­னிட் குழுத் தொகு­திக்கான நகர மன்றம் கைமாறி­ய­போது பிரச்­சி­னை­கள் முளைத்­தன. அல்­ஜு­னிட் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக அத்­தொ­குதி நகர மன்­றம் வழக்கு தொடுத்­தது.

இதில் பாட்­டா­ளிக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. தீர்ப்பை எதிர்த்து பாட்­டா­ளிக் கட்சி நாடாளு மன்ற உறுப்­பி­னர்­கள் மேல்­மு­றை­யீடு செய்­துள்­ள­னர்.

அல்­ஜு­னிட் குழுத் தொகு­திக்­கான நகர மன்­றம் பாட்­டா­ளிக் கட்சி கட்­டுப்­பாட்­டின்­கீழ் அத்­தொ­கு­தி­யின் நிர்­வாக முக­வர் வில­கிக்­கொண்­டது போன்ற பிரச்­சி­னை­களை செங்­காங்­கி­லும் சந்­திக்­கும் நிலை ஏற்­ப­டக்­கூ­டுமா என்று திரு சிங்­கி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­டது.

இதற்­குப் பதி­ல­ளித்த அவர், “நிலை­மையை முன்­கூட்­டியே கணிக்க விரும்­ப­வில்லை. செங்­காங்­கின் தற்­போ­தைய நிர்­வாக முக­ வர்­களை நாங்­கள் இன்­னும் சந்­தித்­துப் பேச­வில்லை. அவர்­களுடன் ஆலோ­சனை செய்து முடிவு எடுப்­போம்,” என்­றார்.

இதே செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பேசிய செங்­காங் குழுத் தொகுதி பாட்­டா­ளிக் கட்சி அணியை வழி நடத்தி வெற்றி கண்ட ஹி டிங்ரு, 37, கொவிட்-19 சூழ­லில் மக்­கள் சந்­திப்­புக் கூட்­டங்­களை நடத்த முடி­யாது என்­ப­தால் புதிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் குடி­யி­ருப்­பா­ளர்­களை அணு­குவது பற்றி பிறகு தெரி­விப்­ப­தாகக் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!