நிமிடக்கணக்கில் நூற்றுக்கணக்கான சுவாப் கருவிகள் தயாரிப்பு

மூக்கிற்குப் பின்பகுதியில் தொண்டைக்கு மேல் உள்ள பகுதியை கொரோனா கிருமிக்காகச் சோதனை செய்யும் சுவாப் கருதிகளை உற்பத்தி செய்வதற்கான புதிய முறையை தேசிய பல்கலைக்கழக (என்யுஎஸ்) ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் புதிய முறையின்படி நிமிடக்கணக்கில் நூற்றுக்கணக்கான சுவாப் கருவிகள் உற்பத்தி செய்யப்படலாம்.

முப்பரிமாண அச்சிடுதல், 'இன்ஜெக் ஷன் மோல்டிங்' ஆகிய முறைகளைப் பயன்படுத்தி 'பைத்தன்'  என்ற இந்தக் கருவியை மூன்று வெவ்வேறு வடிவங்களில் இரண்டு என்யுஎஸ் ஆய்வுக்குழுக்களும் தெமாசிக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. இதுவரை அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுவாப் கருவிகளைத் தருவித்துவரும் சிங்கப்பூர் இனி சுயமாக தனது தேவைகளுக்காக இவற்றைத் தயாரிக்கலாம் என்று தேசிய பல்கலைக்கழகத்தின் புத்தாக்கம் மற்றும் வர்த்தகத் துறைக்கான துணைத்தலைவர் பிரெட்டி போய் தெரிவித்தார். 

இந்த சுவாப் கருவிகள் மூக்கின் வழியாக நுழைக்கப்பட்டு நாசிக் குழியிலிருந்து  திரவிய மாதிரிகள் பரிசோதனைக்காக  எடுக்கப்படுகின்றன.