இன்று முதல் தேசிய தின அன்பளிப்புப் பையைப் பெறலாம்

சிங்கப்பூர் வாசிகள், இன்று முதல் சமூக மன்றங்கள், வசிப்போர் குழுக்கள் ஆகியவற்றில் தேசிய தின  அன்பளிப்புப் பைகளைப் பெறலாம் என்று மக்கள் கழகம் தெரிவித்துள்ளது. 

சமூக மன்றங்களில் ஆகஸ்ட் 2 வரையிலும் வசிப்போர் குழுக்களில் ஜூலை 26 வரையிலும் விடுமுறை நாட்கள் நீங்கலாக மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை அவற்றைப் பெறலாம்.

கொவிட்-19 தொற்று காரணமாக இந்த ஆண்டு தேசிய தின அணிவகுப்பை வீடுகளுக்கே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற கோட்பாட்டின் ஒரு பகுதியாக, தேசிய தின அணிவகுப்பு 2020 ஏற்பாட்டுக் குழு, ‘ஒன்றிணைந்த சிங்கப்பூர் பை’ என்ற அந்த அன்பளிப்புப் பைகளை சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகளின் குடும்பங்களுக்கு வழங்கும். ஒவ்வொரு குடும்பமும் ஒரு பையைப் பெறலாம். அடையாள அட்டை அவசியம்.