புதிதாக 123 பேருக்குக் கொரோனா; சமூக அளவில் 11 பேர் பாதிப்பு

சிங்கப்பூரில் இன்று(ஜூலை 20) நண்பகல் நிலவரப்படி  புதிதாக 123 பேருக்கு கொவிட்- 19  உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் பதிவான மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 48, 035 அதிகரித்துள்ளது.

இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 11 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் ஐவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்; மற்ற 6 பேர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள்.

வெளிநாடுகளில் இந்நோயைத் தொற்றி சிங்கப்பூருக்கு இருவர் திரும்பியுள்ளதாகவும் அமைச்சு கூறியது.