கொவிட் 19: சமூக அளவில் எழுவர் பாதிப்பு 

சிங்கப்பூரில் இன்று நண்பகல் (ஜூலை 22ஆம் தேதி) புதிதாக 310 பேரைக் கொரோனா கிருமி தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனுடன் இந்நாட்டின் மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 48,744க்கு உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஊழியர் தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவர்கள்.

புதிய நோயாளிகளில் சமூக அளவில் எழுவருக்கு பாதிப்பு இருப்பதாக சுகாதார அமைச்சு இன்று தெரிவித்தது. இந்த ஏழு பேரில் மூவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்; மற்ற நால்வர் வேலை அட்டைதாரர்கள்.

வெளிநாட்டில் இந்நோயைச் தொற்றிய ஆறு பேர் சிங்கப்பூருக்குத் திரும்பியவுடன் வீட்டில் தங்கு உத்தரவுக் கடிதங்களைப் பெற்றுகொண்டனர்.