புதிதாக 396 பேருக்கு கொவிட்-19; சமூக அளவில் மூவர் பாதிப்பு

 

சிங்கப்பூரில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் நிலவரப்படி 396 பேருக்குக் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனுடன்  சிங்கப்பூரிலுள்ள மொத்த கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை  52,205க்கு உயர்ந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டோரில் மூவர் சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் வேலை அட்டைதாரர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய மூன்று பேருக்கும் கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இங்கு வந்தவுடன் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு கூறியது.

எஞ்சியோர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவர்கள்.