மருத்துவமனை தீயில் கொவிட்-19 நோயாளிகள் பலி

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீ மூண்ட சம்பவத்தில் கொவிட்-19 நோயாளிகள் எண்மர் உயிரிழந்தனர். 

ஷ்ரே மருத்துவமனையின் பணியாளரின் பாதுகாப்பு அங்கி தீப்பிடித்தது இதற்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகள் தெரிவித்தன.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஐவர் ஆடவர்கள் என்றும் மூவர் பெண்கள் என்றும் அகமதாபாத் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகளுக்கான அதிகாரி திரு ராஜேஷ் பாத் தெரிவித்தார்.

தீச்சம்பவம் குறித்து தாம் மிகவும் கவலை அடைந்திருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon