சிங்கப்பூரில் இன்று ( வெள்ளிக்கிழமை) நண்பகல் நிலவரப்படி புதிதாக 242 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் இங்கு பதிவாகியுள்ள மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 54, 797க்கு அதிகரித்துள்ளது.
சமூக அளவில் சிங்கப்பூரர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட தனது முன்னோட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வெளிநாடுகளில் அறுவர் இந்நோயைத் தொற்றியிருப்பதாகவும் சிங்கப்பூரில் அவர்களுக்கு வீட்டில் தங்கும் உத்தரவு கடிதங்கள் கொடுக்கப்பட்டிருந்ததாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவர்கள்.

