ஆய்வு: இணையப் பதிவுகளில் கூடுதல் கொண்டாட்ட உணர்வு

தேசிய தினம் தொடர்பான இணையப் பதிவுகளில் மக்களின் கொண்டாட்ட உணர்வு இவ்வாண்டு அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. கொவிட்-19 தொற்றுச் சூழல் இவ்வாண்டின் தேசிய தினம் தொடர்பிலான இணையச் செயல்பாடுகளை நலிவடையச் செய்யவில்லை. அதற்கு நேர்மாறாக, சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது இவ்வாண்டு தேசிய தினம் தொடர்புடைய டுவிட்டர் பதிவுகள் இரண்டரை பங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வு கண்டறிந்துள்ளது.

உற்சாக உணர்வை 61% டுவிட்டர் பதிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. இது சென்ற ஆண்டின் 66 விழுக்காட்டைக் காட்டிலும் சற்று குறைவு என்றாலும் எதிர்மறை உணர்வைக் காட்டும் பதிவுகள் சென்ற ஆண்டு இருந்த 19 விழுக்காட்டிலிருந்து இவ்வாண்டு 15% ஆயின.
‘நடுநிலை’ தன்மையுடைய பதிவுகள் இவ்வாண்டு அதிகரித்துள்ளன.

அதிகமானவர்கள் இவ்வாண்டு சமூகத்தையும் தினசரி வாழ்க்கையையும் ‘மக்களைச் சார்ந்த’ மகிழ்ச்சி உணர்வுடன் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் சென்ற ஆண்டு இதுபோன்ற பதிவுகளில் பெரும்பாலானவை ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று பாடாங்கில் நடைபெற்ற பிரதான நிகழ்வையே மையமாகக் கொண்டு அமைந்திருந்தன.

இந்த ஆய்வுக்காக தேசிய தினத்திற்கு முன் இரு வாரங்கறிர் 6,000க்கும் மேற்பட்ட டுவிட்டர் பதிவுகள் சென்ற ஆண்டும் இவ்வாண்டும் ஆராயப்பட்டன.

இதற்காக ‘Quilt.AI’ என்ற செயற்கை நுண்ணறிவுச் சார்ந்த ஆராய்ச்சித் தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இணைந்து செயல்பட்டது. இவ்வாண்டின் தேசிய தினம் அதற்கென ஒரு தனி கதையை உருவாக்கிக் கொண்டுள்ளது என்றது ‘Quilt.AI’ நிறுவனம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!