சுடச் சுடச் செய்திகள்

இரண்டு பகுதிகளாக நடைபெறும் தேசிய தின அணிவகுப்பு

 

தேசிய தின அணிவகுப்புக்காக பத்தாயிரக்கணக்கானோர் வழக்கமாக ஒன்றுகூடுவர். ஆனால் இந்த ஆண்டோ நிலைமை மிகவும் மாறுபட்டுள்ளது. 

உலகளவில் இதுவரை 700,000 உயிர்களை பலிவாங்கிய கொவிட்-19 கிருமிப்பரவலுக்கும் பொருளியல் நிச்சியமின்மைக்கும் மத்தியில் சிங்கப்பூர் தனது 55ஆவது தேசிய தினத்தை இன்று கொண்டாடுகிறது.

 

இன்றைய தேசிய தினம் தனித்தனியாக பாதுகாப்பு இடைவெளியுடன் கொண்டாடப்படவேண்டியது. ஆயினும் ராணுவ அணிவகுப்பு, வான்குடை சாகசங்கள், வாணவேடிக்கை உள்ளிட்ட வழக்கமான அங்கங்கள் இம்முறையும் தொடரவுள்ளன.

 

இந்த தேசிய தின அணிவகுப்பு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி காலை பாடாங் திடலில் இன்று காலை 9.30 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. இரண்டாம் பகுதி தி ஸ்டார் மேடைக்கலை நிலையத்தில் இன்று இரவு 7 மணி முதல் மீண்டும் தொடரும். 

<div class="fb-post" data-href="https://www.facebook.com/tamilmurasu/posts/3473768992633443" data-show-text="true" data-width=""><blockquote cite="https://developers.facebook.com/tamilmurasu/posts/3473768992633443" class="fb-xfbml-parse-ignore"><p>சிங்கப்பூரின் 55ஆவது தேசிய தின அணிவகுப்புக் கொண்டாட்டங்களின் முதல் அங்கம் இன்று காலை பாடாங் திடலில் நடைபெற்றது.  அதிபர்...</p>Posted by <a href="https://www.facebook.com/tamilmurasu/">Tamil Murasu</a> on&nbsp;<a href="https://developers.facebook.com/tamilmurasu/posts/3473768992633443">Saturday, August 8, 2020</a></blockquote></div>

சிங்கப்பூரின் 55ஆவது தேசிய தின அணிவகுப்புக் கொண்டாட்டங்களின் முதல் அங்கம் இன்று காலை பாடாங் திடலில் நடைபெற்றது. அதிபர்...

Posted by Tamil Murasu on Saturday, August 8, 2020

சுதந்திரம் அடைந்தது முதல் சிங்கப்பூரின் பொருளியல் தற்போது ஆக மந்தமான நிலையில் உள்ளது. அடுத்த சில மாதங்களில் மேலும் பலர் தங்களது வேலையை இழக்க நேரிடலாம். இருந்தபோதும் ஒரு நாடாக, ஒன்றுபட்ட சமுதாயமாக சிங்கப்பூர் இதையும் கடந்துபோகும் என்பதை நமக்கு நாமே வலியுறுத்தும் விதமாக இந்தக் கொண்டாட்டங்கள் அமையவிருக்கின்றன.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon