சுடச் சுடச் செய்திகள்

தெங்காவில் விற்பனைக்கு விடப்படும் பிடிஓ வீடுகள்

தெங்கா வட்டாரத்தில் கட்டப்பட்டுள்ள 1,040க்கும் மேற்பட்ட தேவைக்கேற்பக் கட்டப்படும் வீடுகள் (பிடிஓ) இம்மாதம் விற்பனைக்கு விடப்படும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.

Parc Residences @ Tengah என்று அழைக்கப்படும் புதிய வீடமைப்புத் திட்டத்தின்கீழ், இந்த வீடுகள் விற்கப்படும்.
இதற்கு முன்பு தெங்காவில் ஏற்கெனவே இரண்டு வட்டாரங்களில் பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன.

பார்க் வட்டாரத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும் ஏறத்தாழ 7,200 புதிய வீடுகளை அவ்வட்டாரம் கொண்டிருக்கும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெங்காவின் மத்திய பூங்காவுக்கு அருகில் அமைந்துள்ள பார்க் வட்டாரம் 104 ஹெக்டர் பரப்பளளைக் கொண்டது. 
1.5 கிலோ மீட்டர் நீளமுள்ள மழைக்காட்டுப் பாதை போன்ற பல்வேறு பசுமை அம்சங்கள் அடங்கிய அவ்வட்டாரத்தில் இயற்கை அழகுக்குப் பஞ்சமில்லை.

சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் கிட்டத்தட்ட 700 ஹெக்டர் பரப்பளவை தெங்கா வட்டாரம் கொண்டுள்ளது.
இது பீஷான் வட்டாரத்தின் பரப்பளவுக்குச் சமம். 

ஆகக் கடைசியாக ஏறத்தாழ இருபது  ஆண்டுகளுக்கு முன்பு பொங்கோல் குடியிருப்பு வட்டாரம் மேம்படுத்தப்பட்டது.
அதையடுத்து, இப்போது தெங்கா குடியிருப்பு வட்டாரத்தை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் மேம்படுத்தப்படுத்தி வரு

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon