சிங்கப்பூரில் புதிதாக 102 பேருக்கு கொவிட்-19

சிங்கப்பூரில் புதிதாக 102 பேர்  கொவிட்-19 நோயைத் தொற்றியதை சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது. இதையடுத்து சிங்கப்பூரின் மொத்த பாதிப்பு 55,497 ஆக உயர்ந்தது.

புதிதாக பாதிக்கப்பட்டோரில் ஐந்து பேர் சமூகத்தில் இருப்பவர்கள். அவர்களில் ஒருவர் நிரந்தரவாசி என்றும் நான்கு பேர் வேலை அட்டைதாரர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

வெளிநாடுகளில் இந்நோயைத் தொற்றிய அறுவருக்கு வீட்டில் தங்கும் உத்தரவு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் ஊழியர் தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவர்கள்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon