சமூகத்தில் புதிய கிருமித் தொற்றுகள் இல்லை

சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நண்பகல் நிலவரப்படி புதிதாக 83 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் கிருமித்தொற்றின் மொத்த எண்ணிக்கை 55, 580 ஆக உயர்ந்துள்ளது. 

சமூகத்தில் புதிய கிருமித்தொற்றுகள் எதுவும் இன்று பதிவாகவில்லை. ஜூன் 1ஆம் தேதி முதலான தினசரி சமூகத் தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருப்பது இதுவே முதல் முறை.

வெளிநாடுகளில் இக்கிருமியைத் தொற்றி சிங்கப்பூர் திரும்பிய நான்கு பேருக்கு வீட்டில் தங்கும் உத்தரவு கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேலை அனுமதிச் சீட்டு உடையோர் என்று சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

வெளிநாடுகளில் கிருமி தொற்றி, சிங்கப்பூர் திரும்பிய நான்கு பேருக்கு வீட்டில் தங்கும் உத்தரவு கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon