பாடகர் எஸ்.பி.பி. கவலைக்கிடம்

1 mins read
9a621aa3-04b2-4c3c-b518-829bb5194f1d
-

சென்னை: கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (படம்) உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாகவும் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை இன்று மாலை கூறியது.

"இம்மாதம் 5ஆம் தேதி கிருமித்தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. "வியாழன் பின்னிரவு அவரது உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். உயிர்காக்கும் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

"தற்போது அவரை மருத்துவக் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்," என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் பரவியதும் பொதுமக்களும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.