புதிதாக 81 பேருக்கு கொரோனா

புதிதாக 81 பேருக்கு கொரோனா

1 mins read
1b6b3993-4da9-4682-9436-29bb4fdf30a0
-

இன்று நண்பகல் நிலவரப்படி சிங்கப்பூரில் புதிதாக 81 பேருக்கு கொவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 55,661 ஆக உயர்ந்துள்ளது.

புதிய கிருமித்தொற்றுகளில் மூன்று சமூகத்தில் ஏற்பட்டவை. பாதிக்கப்பட்ட மூவரில் இருவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் என்றும் ஒருவர் வேலை அனுமதி அட்டையைக் கொண்டுள்ளவர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மேலும், 16 பேர் வெளிநாடுகளில் இக்கிருமியைத் தொற்றியதாகக் கூறப்பட்டது. இவர்களில் 10 பேர், ஆகஸ்ட் எட்டாம் தேதி சிங்கப்பூருக்கு வந்த கப்பலைச் சேர்ந்தவர்கள்.

பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்கள்