புதிதாக 86 பேருக்கு கொரோனா; சமூக அளவில் 2 சம்பவங்கள்

புதிதாக 86 பேருக்கு கொரோனா; சமூக அளவில் 2 சம்பவங்கள்

1 mins read
17d0b804-0fb0-4f72-949b-a5f76a4d521c
-

இன்று (16 ஆகஸ்ட்) நண்பகல் நிலவரப்படி சிங்கப்பூரில் மேலும் 86 பேருக்கு கொவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 55,747 ஆக உயர்ந்துள்ளது.

புதிய கிருமித்தொற்றுகளில் இரண்டு சமூகத்தில் ஏற்பட்டவை. பாதிக்கப்பட்ட ஒருவர் சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி என்றும் ஒருவர் வேலை அனுமதி அட்டையைக் கொண்டுள்ளவர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்கள்.

நேற்று சிங்கப்பூரில் 81 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டது. சமூக அளவில் மூன்று பேர் பாதிக்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் சமூக அளவில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.