புதிதாக 41 பேருக்கு கொவிட்-19; சமூகத்தில் மூவருக்குத் தொற்று

புதிதாக 41 பேருக்கு கொவிட்-19; சமூகத்தில் மூவருக்குத் தொற்று

1 mins read
92a39461-6fb1-4a14-a13e-87b83be6d159
-

சிங்கப்பூரில் புதிதாக 41 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியிருப்பதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இதனுடன் இந்நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 56, 812க்கு உயர்ந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டோரில் மூவர் சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் வேலை அனுமதி அட்டையில் இங்கு இருப்பவர்கள் என்றது சுகாதார அமைச்சு.

வெளிநாட்டில் நோய்த்தொற்றுக்கு உள்ளான எழுவருக்கு இங்கு வீட்டில் தங்கும் உத்தரவுக் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.