சுங்கை காடுட் ஆற்றில் வெள்ளை நிறத்தில் கழிவு, விசாரணை

சுங்கை காடுட் ஆற்றில் வெள்ளை நிறத்தில் கழிவு, விசாரணை

1 mins read
405ed3eb-5dc5-41a7-a084-52b45949ae60
-

சுங்கை காடுட்டில் ஓடும் ஆற்றில் வெள்ளைக் கழிவு கலந்ததன் தொடர்பில் ஒரு நிறுவனம் விசாரணையை எதிர்நோக்கி உள்ளது. அந்தப் பகுதியில் இயங்கும் ஒரு தொழிற்சாலைதான் அந்தக் கழிவுக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

வெள்ளைக் கழிவு வடிகாலில் ஓடி சுங்கை பாங் சுவாவில் கலந்ததாக பொதுமக்களிடம் இருந்து தகவல் கிடைத்ததை அடுத்து பொதுப் பயனீட்டுக் கழகம் உடனடியாகச் செயலில் இறங்கியது. அந்தக் கழிவு நச்சுத்தன்மையற்ற சிமெண்ட் கலவை என்பதும் அது சுங்கை காடுட்டில் செயல்படும் ஒரு தொழிற்சாலையில் இருந்து வெளியாகி இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது.

இரண்டே மணி நேரத்தில் அவை அகற்றப்பட்டதாகவும் கால்வாய் சுத்தப்படுத்தப்பட்டதாகவும் இந்தக் கழகம் தேசிய சுற்றுப்புற வாரியத்துடன் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்தது. புலன் விசாரணை நடப்பதாகவும் அந்தக் கழிவுக்குப் பொறுப்பான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டறிக்கையில் இரண்டு அமைப்பு களும் தெரிவித்துள்ளன.